Home » Entries posted by Shankar U (Page 3)
Entries posted by Shankar

ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை!

Comments Off on ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை!

சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கவுரவ் ரயில் சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா சென்றபோது அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் […]

Continue reading …

வினோத ஹெல்மெட் அணிந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Comments Off on வினோத ஹெல்மெட் அணிந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி பொதுமக்கள் அச்சுறுத்தியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர். தென்காசியிலுள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக […]

Continue reading …

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

Comments Off on மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இச்சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் […]

Continue reading …

ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

Comments Off on ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

கூகுள் நிறுவனம் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. […]

Continue reading …

சென்னையில் ‘பார்முலா 4 கார் பந்தயம்‘

Comments Off on சென்னையில் ‘பார்முலா 4 கார் பந்தயம்‘

பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளது. இந்த கார் பந்தயத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி சென்னையில் நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 நடைபெறவுள்ளன. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 போட்டிகளுக்கான […]

Continue reading …

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Comments Off on 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை ஆய்வு மண்டல தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும். அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர், […]

Continue reading …

ஞானவேல் ராஜாவிடம் சசிகுமார் கேள்வி?

Comments Off on ஞானவேல் ராஜாவிடம் சசிகுமார் கேள்வி?

“பருத்திவீரன்” திரைப்படத்திற்கான பிரச்னை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஞானவேல் ராஜா இதற்கு வருத்தம் தெரிவித்தவுடன் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது. ஆனால் இப்பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தற்போது சசிக்குமாரின் அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை ஞானவேல் ராஜாவுக்கு எழுப்பி சசிகுமார் வெளியிட்ட அறிக்கையில், “அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி […]

Continue reading …

ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!

Comments Off on ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!

சமீபத்தில் கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 33வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இவர்களுடன் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி […]

Continue reading …

பள்ளியில் காலை உணவு திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பு!

Comments Off on பள்ளியில் காலை உணவு திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பு!

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான வரவு, செலவுகள் ஏனைய நிர்வாகங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், சென்னை […]

Continue reading …

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!

Comments Off on வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!

இன்னும் ஒரு சில நாட்களில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இன்று முதல் மூன்று நாட்களுக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை […]

Continue reading …