Home » Entries posted by Shankar U (Page 105)
Entries posted by Shankar

ஜோதிமணி எம்பி அதிருப்தி!

Comments Off on ஜோதிமணி எம்பி அதிருப்தி!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அரசியலில் பெண்களின் உழைப்பு மற்றும் திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டி ஒன்றில், “பெண்கள் ஏராளமான தடைகள் பிரச்சனைகளை தாண்டி சமூகத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள் பெண்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை. அரசியல் கட்சிகள் பெண்களின் பங்களிப்பை பெயர் அளவில் தான் இருக்க விரும்புகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலைதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Continue reading …

விஜய் கட்சியின் முதல் உறுப்பினர் யார்?

Comments Off on விஜய் கட்சியின் முதல் உறுப்பினர் யார்?

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் துவங்கவுள்ளது. நடிகர் விஜய் தன்னை முதல் உறுப்பினராக இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி […]

Continue reading …

போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Comments Off on போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்துள்ளார். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். போதை பொருள் தொடர்புடைய 2138 வழக்குகளில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற வழக்குகளின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு […]

Continue reading …

மதிமுகவுக்கு 1+1 வழங்க திமுக திட்டம்!

Comments Off on மதிமுகவுக்கு 1+1 வழங்க திமுக திட்டம்!

திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநில உறுப்பினர் பதவியும் வழங்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனிச்சின்னத் தில்தான் போட்டியிடுவோம் என்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்தனர். இதனால் […]

Continue reading …

திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

Comments Off on திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

திமுக விசிக இடையே மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் […]

Continue reading …

நள்ளிரவில் கொள்ளையர்களின் நடமாட்டம்!

Comments Off on நள்ளிரவில் கொள்ளையர்களின் நடமாட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் முகமூடி கொள்ளயர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிவசக்தி நகரில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் வயோதிகர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களின் மகன்கள், மகள்கள் சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். நள்ளிரவில் அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி கண்ணதாசன் என்பவர் வீட்டையும், அவரது எதிர்வீடான ஓய்வுபெற்ற மீன்வளத்துறை அதிகாரி சுந்தரேசன் என்பவர் வீட்டையும், […]

Continue reading …

திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

Comments Off on திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். திடீரென அவர் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், “ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற […]

Continue reading …

முருகதாஸ் படத்துக்காக டிரைனர் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

Comments Off on முருகதாஸ் படத்துக்காக டிரைனர் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

ஏ ஆர் முருகதாஸ், “தர்பார்” தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்தார். இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சில நாட்கள் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது வி.ஐ.டி. கல்லூரியில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் […]

Continue reading …

விஜய் படத்தில் இணைந்த நகைச்சுவை நடிகர்!

Comments Off on விஜய் படத்தில் இணைந்த நகைச்சுவை நடிகர்!

The Greatest Of All Time என்ற படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு “இம்மாத இறுதியில் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு விடும். […]

Continue reading …

சமந்தா பாலிவுட்டில் தயாரிப்பாளராக முயற்சி!

Comments Off on சமந்தா பாலிவுட்டில் தயாரிப்பாளராக முயற்சி!

முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமந்தா இப்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அடுததடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 14 […]

Continue reading …