Home » Entries posted by Shankar U (Page 107)
Entries posted by Shankar

இந்திய அரசியலமைப்புச் விவாதம் வேண்டும்; கவர்னர் ஆர்.என். ரவி!

Comments Off on இந்திய அரசியலமைப்புச் விவாதம் வேண்டும்; கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழக கவர்னர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று ஆளுநர் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது நோக்கம் நிறைவேற உள்ளதா? என்பது […]

Continue reading …

ஆவின் பால் விலை குறித்து அண்ணாமலை ஆவேசம்!

Comments Off on ஆவின் பால் விலை குறித்து அண்ணாமலை ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பால்வளத்துறை இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணாமலை, “ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. தமிழ்நாடு அரசியலில் […]

Continue reading …

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு!

Comments Off on ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திர மாநில அமைச்சர் டிசம்பர் மாதம் முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடு முழுதும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இதை வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை […]

Continue reading …

டைம் டிராவல் கதையில் விஜய்!

Comments Off on டைம் டிராவல் கதையில் விஜய்!

“லியோ” திரைப்படம் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் ரிலீசாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தையடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். “தளபதி 68” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. […]

Continue reading …

எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

Comments Off on எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயை காசா மற்றும் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வருகிறது. இப்போரால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் […]

Continue reading …

நாக சைதன்யா – சாய் பல்லவியின் படத்தின் பர்ஸ்ட் லுக்!

Comments Off on நாக சைதன்யா – சாய் பல்லவியின் படத்தின் பர்ஸ்ட் லுக்!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் நாக சைதன்யா வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “தேங்க்யூ” மற்றும் “கஸ்டடி” ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவ்வகையில் இப்போது அவர் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. படத்தை “கார்த்திகேயா 2” படத்தை […]

Continue reading …

“டன்கி” படத்தின் அப்டேட்!

Comments Off on “டன்கி” படத்தின் அப்டேட்!

கடந்த சில ஆண்டுகள் ஷாருக் கானுக்கு மோசமான அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]

Continue reading …

இளையராஜா பயோபிக்கிற்கு இசைப்புயல் இசையா?

Comments Off on இளையராஜா பயோபிக்கிற்கு இசைப்புயல் இசையா?

1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இளையராஜா. இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

தமிழ்நாடு பாதுகாப்பானது; ஆளுனர் ரவி புகழாரம்!

Comments Off on தமிழ்நாடு பாதுகாப்பானது; ஆளுனர் ரவி புகழாரம்!

கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய பழங்குடியினர் இளைஞர் விழாவில் கலந்து கொண்டபோது தமிழ்நாட்டின் பெருமை குறித்து பிற மாநில பழங்குடி மக்களிடையே பேசியுள்ளார். சென்னையில் அடையாரில் உள்ள இளையோர் விடுதியில் நேரு யுவகேந்திராவின் 15வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் வருகை புரிந்துள்ளனர். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது […]

Continue reading …

மீண்டும் சூர்யா -கௌதம் மேனன் கூட்டணி!

Comments Off on மீண்டும் சூர்யா -கௌதம் மேனன் கூட்டணி!

“துருவ நட்சத்திரம்” கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை முடித்தது குறித்து இயக்குனர் கௌதம் மேனன், “போதிய பணம் இல்லாததால் இந்த படத்தை முடிக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் அப்போது படங்களில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டுதான் இந்த […]

Continue reading …