Home » Entries posted by Shankar U (Page 110)
Entries posted by Shankar

லஞ்சம் வாங்கும் எம்பி எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Comments Off on லஞ்சம் வாங்கும் எம்பி எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

உச்சநீதிமன்றம் லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கில்லை என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் வாங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்க்கையில் நேர்மையை அழிக்கிறது என்று கூறிய உச்சநீதிமன்றம் லஞ்சம் வாங்குவதே குற்றமாகும் […]

Continue reading …

அனிமல் படத்தின் 2ம் பாகத்தில் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை!

Comments Off on அனிமல் படத்தின் 2ம் பாகத்தில் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை!

சமீபத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய “அனிமல்” திரைப்படம் ரிலீசானது. படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் […]

Continue reading …

அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் சத்யராஜ்!

Comments Off on அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் சத்யராஜ்!

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் நடிகர் அர்ஜுன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் […]

Continue reading …

சபாநாயகரிடமிருந்து பொன்முடி தொகுதி பற்றி தகவல் இல்லை!

Comments Off on சபாநாயகரிடமிருந்து பொன்முடி தொகுதி பற்றி தகவல் இல்லை!

தேர்தல் ஆணையர் பொன்முடி தொகுதி குறித்து சபாநாயகரிடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை: என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருடைய அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் சபாநாயகரிடமிருந்து முறையாக பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்படவில்லை. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து சபாநாயகரிடம் […]

Continue reading …

செந்தில் பாலாஜி வருத்தம்?

Comments Off on செந்தில் பாலாஜி வருத்தம்?

சமீபத்தில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். தற்போது கரூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோக இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதன் காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த […]

Continue reading …

பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை!

Comments Off on பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை!

போலீசார் சிறை கைதி உள்ளிட்ட நான்கு பேரிடம் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் உணவக பணியாளர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் […]

Continue reading …

ம.நீ.மவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக?

Comments Off on ம.நீ.மவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறும் என்றும் அக்கட்சிக்கு கோவை தொகுதி மற்றும் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது முதல் கட்ட பேச்சு வார்த்தை கூட இன்னும் நடைபெறா காரணத்தால் திமுக கூட்டணியில் கமல் கட்சி இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினரை விசாரித்த போது ஏற்கனவே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இரண்டு தொகுதிகள் தங்கள் கட்சி கேட்டதாகவும் ஆனால் ஒரு […]

Continue reading …

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

Comments Off on உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக உடனான கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு முடியும், தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் […]

Continue reading …

அரசியலிலிருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவிப்பு!

Comments Off on அரசியலிலிருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவிப்பு!

தீவிர அரசியலிலிருந்து பாஜக எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிழக்கு டில்லியில் எம்பியாக இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2024ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு சீட் வழங்குவது சந்தேகம் என பாஜக வட்டாரங்கள் கூறி வருகிறது. திடீரென அரசியலிலிருந்து விலகும் முடிவை கவுதம் கம்பீர் எடுத்துள்ளார். […]

Continue reading …

ராயன் படத்தில் தனுஷின் மகன் நடித்துள்ளாரா?

Comments Off on ராயன் படத்தில் தனுஷின் மகன் நடித்துள்ளாரா?

தனுஷ் தனது 50வது திரைப்படமான “ராயன்” படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இதில் தனுஷ் அண்ணனாகவும், […]

Continue reading …