
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானதே என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரிகிறது, அப்படி ஒருவேளை வந்தால் நானே உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன் என்று தெரிவித்தார். கோவையில் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் என்பவர் பேட்டியில், “நான் பாஜகவில் சேர போவதாக வதந்திகள் பரப்பி வருகிறார்கள். அது முழுக்க முழுக்க தவறான தகவல். பின்னர் பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் தான் அதிமுகவுக்கு வரப் போகிறார், […]
Continue reading …
கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “அமரன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இத்திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் “அமரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் டீசரிலிருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து […]
Continue reading …
கோபி மற்றும் சுதாகர் சமூக வலைதளமான யூடியூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு திரைப்படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தனர். இதற்காக தங்கள் யூடியூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இந்த படத்தை இயக்குகிறார். […]
Continue reading …
திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘தேர்தலுக்குப் பின் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்‘ என்று தெரிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]
Continue reading …
நேற்று பிரதமர் மோடி நள்ளிரவில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துடன் ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள ஷிவ்பூர்- புல்வாரியா லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவும், வேறுசில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்றிரவு வாரணாசி வந்தார். நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய […]
Continue reading …
புஸ்ஸி ஆனந்த் அறிக்கை தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும், உறுப்பினர்கள் […]
Continue reading …
இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை போக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது. விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்நிறுவனம் […]
Continue reading …
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “கான்ஜூரிங் கண்ணப்பன்” திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து அவர் இப்போது “வித்தைக்காரன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை. […]
Continue reading …
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் “யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின் இதே கதையை வருண் என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் “ஜோஸ்வா இமைபோல் காக்க” என்ற பெயரில் கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது. இதையடுத்து மார்ச் 1ம் தேதி இந்த படம் […]
Continue reading …
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தற்போது The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் […]
Continue reading …