Home » Entries posted by Shankar U (Page 124)
Entries posted by Shankar

அபுதாபியில் இந்து கோவில்! பிரதமர் மோடி திறந்து வைப்பு!

Comments Off on அபுதாபியில் இந்து கோவில்! பிரதமர் மோடி திறந்து வைப்பு!

பிரதமர் மோடி அபுதாபியில் 900 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு […]

Continue reading …

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Comments Off on சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. இதற்காக பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் […]

Continue reading …

தேசிய அரசியலில் களமிறங்குகிறாரா பிரியங்கா?

Comments Off on தேசிய அரசியலில் களமிறங்குகிறாரா பிரியங்கா?

பிரியங்கா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தார். தற்போது தேசிய அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தேசியளவில் பிரபலமாக இருக்கும் ஒரு முகத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் பிரியங்கா காந்தியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த […]

Continue reading …

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்!

Comments Off on திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்!

ஊடகங்களில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஐந்து தொகுதிகள், புதுவையை சேர்த்து ஆறு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்பதை திமுக பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை கொடுத்த 10 தொகுதியாவது கொடுக்க வேண்டும் என்றும் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாராளுமன்றத் […]

Continue reading …

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு!

Comments Off on அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு!

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இந்த முறை கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய […]

Continue reading …

மீண்டும் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி!

Comments Off on மீண்டும் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி!

விஜய்யை வைத்து “துப்பாக்கி,” “கத்தி” மற்றும் “சர்கார்” ஆகிய ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வரிசையில் 4வது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்கவிருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய “தர்பார்” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்திலிருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கவுள்ளார். […]

Continue reading …

சூர்யாவுடன் சூரிக்கு முக்கியக் கதாபாத்திரம்?

Comments Off on சூர்யாவுடன் சூரிக்கு முக்கியக் கதாபாத்திரம்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெறும் வைத்தி என்ற ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சூரியை நடிக்க […]

Continue reading …

விவசாயிகள் இன்று ரயில் மறியல் நடத்த திட்டம்!

Comments Off on விவசாயிகள் இன்று ரயில் மறியல் நடத்த திட்டம்!

விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி செல்லும் பேரணி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை தடுக்க ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Continue reading …

மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

Comments Off on மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இச்செயலை கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக அறிவிப்பில், “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர் 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. […]

Continue reading …

தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

Comments Off on தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சோதனை செய்தனர். நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்தனர். நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் என்ஐஏ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோவை கார் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என […]

Continue reading …