
நாளை காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெறுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் நாளை டில்லியிலிருந்து சென்னை வருகின்றனர். விமான […]
Continue reading …
மாணவர் ஒருவர் தமிழில் பேசியதால் ஆசிரியை மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நாயகி என்பவர், அவ்வகுப்பைச் சேர்ந்த மாணவன் தமிழில் பேசியதால் ஆத்திரமடைந்து அவரது காதைப் பிடித்துத் திரிகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி […]
Continue reading …
11 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் எஸ்.பி.சாமிநாதனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாக்ரேலே சேப்பஸ் கல்யாண் வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். […]
Continue reading …
திமுக சார்பில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட, கழகத்தலைவர் முதலமைச்சர், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளார்கள். இக்குழுவின் சார்பில், சேலம் மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயம் -கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம். இக்கூட்டத்தின் […]
Continue reading …
உலகநாயகன் கமல்ஹாசன் நாடு முழுதும் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். 75வது குடியரசு தின விழா அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு சாதனை செய்தவர்களுக்கு சிறப்பு விருதுகளை அளித்தார். உலக நாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில், “மக்களால் மக்களுக்காக […]
Continue reading …
நேற்று மாலை இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி காலமானார். அவரது மறைவிற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் செய்தியில், “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு […]
Continue reading …
சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதன்பின் விடுதலை செய்யப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தன்னை சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனது […]
Continue reading …
2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மவிபூஷன் விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதாகம். இதில் இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக […]
Continue reading …
அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதோடு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, “வள்ளலாரின் கொள்கையை கடைப்பிடித்து வரும் ஊரில் போலீசார் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாதது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடப்படும், அடுத்த கையெழுத்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும்” என்று கூறினார். […]
Continue reading …
பட்ஜெட் தயாரித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டி வழங்கப்படுவது வழக்கம். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. பட்ஜெட்டில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் குறித்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று நிர்மலா […]
Continue reading …