விஜயகாந்த் உட்பட 22 பேருக்கு பத்ம விருதுகள்!

Filed under: இந்தியா,தமிழகம் |

2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மவிபூஷன் விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதாகம். இதில் இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேரும் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கலை ஆசிரியர் பத்ரப்பன், விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், மருத்துவர் நாச்சியார் ஆகிய ஐவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.