
காங்கிரஸ் தலைவர் கார்கே கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் […]
Continue reading …
நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர் வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூரி “விடுதலை 2” மற்றும் “கொட்டுக்காளி” ஆகிய படங்களை முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் “கருடன்” படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் […]
Continue reading …
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். ஆனால் அதன் பின்னர் “36 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய் […]
Continue reading …
பன்சாலி மிகப்பிரம்மாண்டமாக அழகியல் தன்மையோடு புராணப் படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய “கங்குபாய் கத்யவாடி” திரைப்படத்துக்காக ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் 1952ம் ஆண்டு வெளியான “பைஜு பாவ்ரா” படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது […]
Continue reading …
நடிகர் சூர்யா பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து தயாரிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், சூர்யா ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். அதற்குக் காரணம் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இப்போது “வணங்கான்” படத்தை இயக்குனர் பாலா மற்றும் “மாநாடு” படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் […]
Continue reading …
கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலையிலேயே ஆம்னி பேருந்துகள் பயணிகளை இறக்கி விடுகின்றன என்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் இதுகுறித்து கூறும்போது, “கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் நிரம்பியவுடன் பேருந்து நிலையத்திற்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே வேறு வழியில்லாமல் நாங்கள் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகிறோம். இது குறித்து நாங்கள் விரைவில் […]
Continue reading …
நடிகர் நரேன் நடிப்பில் KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆத்மா.” படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் […]
Continue reading …
இஸ்ரோ தலைவர் சோமநாத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெ உள்ளது. பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. பாரதிய ஜனதா இந்த மாநிலத்தில் மிகவும் குறைவான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் […]
Continue reading …
தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டதை தற்போது 2500 ரூபாய் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. நிரந்தர ஆசிரியர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். பகுதி நேர ஆசிரியராக பணிபுரிபவர்கள் மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கி வருகின்றனர். அவர்கள் தற்போது வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வருகின்றனர். தற்போது ரூ. 2500 ரூபாய் அவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இனி பகுதிநேர ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் […]
Continue reading …