
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் சென்னை வெள்ளம் குறித்து அரசை குறை கூறுவதைவிட இறங்கி வேலை செய்வதே முக்கியம் என்று கருத்து தெரிவித்துள்ளார். சென்னையின் பல பகுதிகளில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் வடியாத நிலையில் நிவாரண பொருட்கள் பாடல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் சரியான ஏற்பாடுகள் […]
Continue reading …
ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடக்கவிருந்த நிலையில் தற்போது கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15, 16 தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. எந்த தேதியும் குறிப்பிடாமல் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னை கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ‘கார் பந்தயம் […]
Continue reading …
பேமிலி 9 என்ற தனது நிறுவனத்தின் சார்பாக நடிகை நயன்தாரா பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாப்கின்கள் வழங்கினார். நயன்தாரா போல் நாமும் களத்தில் இறங்கி செயல்படுவோம் என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “மாதர் பிரச்சனைகளை மிகப் பெரிய சவாலாக சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவும் மாற்று துணி கூட இல்லாமல் அல்லாடும் இதுபோன்ற இடர் காலங்களில் ஒரு குடும்பத்தையே லகுவாக தாங்கும் அவர்கள் சக்தியிழக்கும் சமயங்களில் அணுசரனையாய் […]
Continue reading …
டிவிஎஸ் நிறுவனம் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. அத்துடன், மிக்ஜாம் புயல் தீவிரத்தால் சென்னையில் ஒட்டுமொத்த பகுதிகளும் பாதிக்கப்படுள்ளன. சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர், போலீசார், தன்னார்வலர்கள் மீட்டனர். தற்போது சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து, இயல்புக்கு திரும்பி வருகிறது. முதலமைச்சரின் பொது நிவாராண நிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் […]
Continue reading …
ரிசர்வ் வங்கி யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதியளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவுமுறை இந்திய தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. யுபிஐ மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் மொபைல் மூல்ம நாம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தேவையில்லை. இதனால் மக்கள் இப்போ பே, பேடிஎம், பாரத் பே, கூகுள் பே போன்ற […]
Continue reading …
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிர்வாக பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பரிந்துரை அறிக்கை மீது வாக்கெடுப்பு […]
Continue reading …
இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு எட்டியுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் […]
Continue reading …
கேரளாவில் காதலனனின் குடும்பத்தினர் 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்த சகானா என்ற மருத்துவர் தனது சக மருத்துவரான ரூவாயிஸ் காதலித்து வந்தார். இருவரது பெற்றோர்களும் திருமணம் பேச்சு வார்த்தை நடத்தினர். காதலன் பெற்றோர்கள் அதிக வரதட்சனை எதிர்பார்த்ததாக தெரிகிறது. குறிப்பாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம் மற்றும் […]
Continue reading …
ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை சென்னை மட்டுமல்லாது வெள்ளப்பெருக்கால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்காள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், மாவட்டங்கள் மிகக்கடுமையாகப் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். சென்னை முழுவதுமாக மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவி […]
Continue reading …