Home » Entries posted by Shankar U (Page 203)
Entries posted by Shankar

முரளிதரனின் ‘800’ பட டிரெயிலர்!

Comments Off on முரளிதரனின் ‘800’ பட டிரெயிலர்!

‘800’ என்ற திரைப்படம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இத்திரைப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் […]

Continue reading …

பிரபாஸின் “சலார்” பிஸ்னஸில் சுணக்கம்!

Comments Off on பிரபாஸின் “சலார்” பிஸ்னஸில் சுணக்கம்!

நடிகர் பிபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ரிலீசான அவரின் “ஆதிபுருஷ்” திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் “சலார்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது “கே.ஜி.எப்” இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை “கே.ஜி.எப்” தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக அறிவித்திருந்த […]

Continue reading …

உதயநிதிக்கு மம்தா அறிவுரை!

Comments Off on உதயநிதிக்கு மம்தா அறிவுரை!

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படுத்தும் படி பேசக்கூடாது என்றும் அமைச்சர் உதயநிதிக்கு அறிவுரை கூறியுள்ளார். மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “உதயநிதி ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் இக்கருத்தை கூறினார் என்று எனக்கு தெரியவில்லை, தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உள்ளது […]

Continue reading …

சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட்

Comments Off on சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட்

பெங்களூர் நீதிமன்றம் சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பரப்பன அகராதார சிறையில் இருந்த போது அவர் சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. மேலும் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரின் ஜாமின் கையெழுத்திட்ட […]

Continue reading …

உதயநிதியை எதிர்ப்பது ஏன்? வைரமுத்து கேள்வி?

Comments Off on உதயநிதியை எதிர்ப்பது ஏன்? வைரமுத்து கேள்வி?

கவிஞர் வைரமுத்து திருவள்ளுவரைக் கொண்டாடுபவர்கள் திருக்குறளை பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? என தனது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதி சமீபத்தில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவினர் அதற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது: சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் […]

Continue reading …

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை!

Comments Off on உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் திராவிடர் கழகம் முன்னெடுத்த ‘சனாதான ஒழிப்பு மாநாட்டில்’ கலந்து கொண்டார். அதில் அவர் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உதயநிதி தான் பேசியவற்றை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரமஹம்ச […]

Continue reading …

இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

Comments Off on இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

மனோஜ் பாரதிராஜா “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் 1999ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் அவரால் பெரியளவில் திரையுலகில் வலம் வர முடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனராகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார். தற்போது மனோஜ், “மார்கழி திங்கள்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் […]

Continue reading …

திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

Comments Off on திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்று எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும், அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,01,116ம் முறை கோவிந்தா கோவிந்தா என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் […]

Continue reading …

பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

Comments Off on பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். […]

Continue reading …

“பாரத்” வார்த்தை குறித்து டி.ஆர்.பாலு கருத்து

Comments Off on “பாரத்” வார்த்தை குறித்து டி.ஆர்.பாலு கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு “பாரத்” என இந்தியாவை அழைப்பதை தவறு என்று கூற முடியாது, ஏனெனில் பாரத் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்ற பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிஆர் பாலு கூறும் போது, “பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு […]

Continue reading …