புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான மக்கள் மனதை புண்படுத்தும் படியான ஒரு கருத்தை சொல்லி உள்ளார். உங்களுக்கு வேண்டுமானால் சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Related posts:
காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் 'பி' டீம்: திமுகவை ...
ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும். காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் தீர்மானம்.
பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா?
அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் KYN செயலி!



