
மதுரை ஐகோர்ட் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை என உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் வழக்கு தொடர்ந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Continue reading …
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற “தீ” என்ற பாடல் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் சிங்கிள் பாடலான “ரஞ்சிதமே” என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியாக உள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Continue reading …
சென்னை மெட்ரோ இனி வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. தினமும் சென்னை மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் கியூஆர் ஸ்கேன் செய்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப் மூலமும் மெட்ரோ ரயில் […]
Continue reading …
18 வயது சிறுமியை ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் அயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்த ரயிலிலிருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அவரும் தன்னைத் தானே கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். […]
Continue reading …
ஆறு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ள இளைஞரை பிரபல கார் நிறுவன தலைவர் பாராட்டியுள்ளார். முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் தலைவர் ஆனத் மகிந்திரா. புதுமை விரும்பி மற்றும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களை கண்டறிந்து பாராட்டும் பண்புடையவர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 6 பேர் அமரும் வகையில், ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கிய இளைஞரின் கண்டுப்பிடிப்பு மற்றும் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், இது […]
Continue reading …
விரைவில் மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் எலான் மஸ்க் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று, மனிதர்களின் மூளையில் சிப்பை பொறுத்தி அதை கணிணியின் மூலம் இயங்க வைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மனித […]
Continue reading …
முதல் முறையாக இந்தியாவிலேயே கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் அமையவுள்ளது என்பதுதான் கூடுதல் தகவல். சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் […]
Continue reading …
தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தீவிரமாக வாதம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. 2017ல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்திய நிலையில் மீண்டும் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்த தமிழ்நாடு அரசு “ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. இதில் […]
Continue reading …
வருமான வரித்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரிபாக்கியில் 20% மட்டுமே செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் அதை முன்னாள் அமைச்சர் செலுத்தவில்லை என்றும் அதனால் அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் மூடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. விஜயபாஸ்கர் 206 கோடி வரிக்காக 117 ஏக்கர் நிலம் 4 வங்கி கணக்குகள் ஆகியவற்றை வருமான வரித்துறை […]
Continue reading …
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிஎஸ்டி வரை முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல். இந்தவசூல் தொகை கடந்த ஆண்டு நவம்பரை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 […]
Continue reading …