Home » Entries posted by Shankar U (Page 394)
Entries posted by Shankar

வடிவேலு படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை!

Comments Off on வடிவேலு படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளும் நிறைவு பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை குறித்த தகவலை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாகவும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளதுள்ளார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிபோது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட […]

Continue reading …

மின்இணைப்பு மோசடி குறித்து டிஜிபி எச்சரிக்கை!

Comments Off on மின்இணைப்பு மோசடி குறித்து டிஜிபி எச்சரிக்கை!

டிஜிபி சைலேந்திரபாபு ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு குறித்து சில மோசடி நடந்து வருவதாகவும் அது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களை இணைக்காமல் இருந்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று சில மோசடி பேர்வழிகள் செல்போனுக்கு லின்க் அனுப்புவார்கள். அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் என […]

Continue reading …

ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி!

Comments Off on ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் ரம்மி தடை சட்டம்சமீபத்தில் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை ஆளுநரை அமைச்சர் ரகுபதி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென சட்டத்துறை அமைச்சர் கவர்னரிடம் நேரில் வலியுறுத்துவார் […]

Continue reading …

பிரணாய் ராய் என்.டி.டி.வி.யிலிருந்து விலகல்!

Comments Off on பிரணாய் ராய் என்.டி.டி.வி.யிலிருந்து விலகல்!

பிரணாய் ராய் மற்றும் அவருடைய மனைவி திடீரென என்.டி.டி.வி. இயக்குனர் பதவியிலிருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பிரபல தொழிலதிபர் அதானி என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வாங்கினார். அதன் பிறகு நடந்த கூட்டத்தின் முடிவில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இயக்குனர் பதவியிலிருந்து விலக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது என்.டி.டி.வி.யின் மேலும் 26 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்க முன் வந்துள்ளதை அடுத்து பிரணாய் ராய் […]

Continue reading …

குற்றாலத்தில் பயணிகள் குளிக்க தடை!

Comments Off on குற்றாலத்தில் பயணிகள் குளிக்க தடை!

சுற்றுலாத் தளமான குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்ததை அடுத்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் […]

Continue reading …

திமுக செய்தி தொடர்பாளரின் கருத்து!

Comments Off on திமுக செய்தி தொடர்பாளரின் கருத்து!

திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன். அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் என்ன தகராறு என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவருக்கு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகவும் பிரதமரை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தருகிறார் என்றால் அந்த மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது […]

Continue reading …

ரூ.420 கோடி மதிப்பில் 1000 பேருந்துகள்!

Comments Off on ரூ.420 கோடி மதிப்பில் 1000 பேருந்துகள்!

தமிழக அரசு ரூபாய் 420 கோடி மதிப்பில் தமிழகத்தில் 1,000 பேருந்துகள் வாங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது 1,000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் இதர கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா ரூபாய் 42 லட்சம் என மதிப்பீடு செய்து மொத்தம் 420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக […]

Continue reading …

ஈ.சி.ஆர் – ஓ.எம்.ஆரில் 180 கோடியில் மேம்பாலம்!

Comments Off on ஈ.சி.ஆர் – ஓ.எம்.ஆரில் 180 கோடியில் மேம்பாலம்!

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரண்டு பாதைகள் சென்னையிலிருந்து புதுவை செல்ல பயன்படுத்தப்படும் பாதைகள். இந்த இரண்டு பாதைகளை சென்னையுடன் இணைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் ரூபாய் 180 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி […]

Continue reading …

மக்கள் வெள்ளத்தில் லட்சுமி யானையின் இறுதி ஊர்வலம்!

Comments Off on மக்கள் வெள்ளத்தில் லட்சுமி யானையின் இறுதி ஊர்வலம்!

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயர் கோவில். இக்கோவிலில் பெரியவர் முதல் சிறியவர் என அனைவரின் மனதிலும் இடம்பெற்ற கோவில் யானை லட்சுமி. கடந்த 25 ஆண்டுகாலமாக லட்சுமி யானை இக்கோவிலில் இருக்கிறது. லட்சுமி யானை தெருக்களில் செல்லும்போது மக்கள் அதற்கு பாசமாக பழங்கள் கொடுப்பது வழக்கம். அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமிக்கு கடந்த சில ஆண்டுகள் முன்னதாக சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் லட்சுமியை தினசரி காலை நடைப்பயிற்சி அழைத்து […]

Continue reading …