Home » Entries posted by Shankar U (Page 439)
Entries posted by Shankar

ஜப்பான் விடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பு!

Comments Off on ஜப்பான் விடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பு!

மக்களுக்கு ஜப்பான் கொடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மீது வடகொரியா போர் தொடரும் ஆபத்து உள்ளதாக நாட்டு மக்களை ஜப்பான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியா முன்பு இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை […]

Continue reading …

80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

Comments Off on 80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளிலும், பாஜக வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒட்டுமொத்த 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் பூபிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அணிவகுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் […]

Continue reading …

செயல்பாட்டை நிறுத்தியது மங்கள்யான்!

Comments Off on செயல்பாட்டை நிறுத்தியது மங்கள்யான்!

மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. செப்டம்பர் 2014ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் இஸ்ரோவின், இந்தியாவின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. பல நாடுகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பல பில்லியன்களை செலவு செய்து வரும் நிலையில் இஸ்ரோ ரூ.450 கோடியில் இந்த மங்கள்யான் திட்டத்தை […]

Continue reading …

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

Comments Off on சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!
சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்வதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றிய 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. கடந்த […]

Continue reading …

காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

Comments Off on காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?
காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

பெங்களூருவில் ஏற்பட்ட கனமழையால் பலரது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்தது. அதில் ஒருவரது காரின் விலை ரூ.11 லட்சம், ஆனால் காரை ரிப்பேர் செய்வதற்கு ரூ.22 லட்சம் ஆகும் என கார் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் என்பவர் தனது தனது காரை ரிப்பேர் செய்ய கார் நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். கார் ரிப்பேர் செய்ய எவ்வளவு கட்டணம் என்று கேட்டதற்கு கார் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் செலவாகும் என்று […]

Continue reading …

வாகன விழிப்புணர் பிரசாரமே தண்டனை!

Comments Off on வாகன விழிப்புணர் பிரசாரமே தண்டனை!

எந்த இடத்தில் பைக் சாகசம் நிகழ்வு நடந்ததோ அந்த இடத்திலேயே விழிப்புணர்வில் ஈடுபட்டார் யூடிபர் கோட்லா பினோய். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் கூட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பல முறை எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் சென்னை, அண்ணாசலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல […]

Continue reading …

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அவகாசம்!

Comments Off on மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அவகாசம்!

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் […]

Continue reading …

மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்!

Comments Off on மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்!

மனைவியை தோளில் சுமந்து கொண்டு திருப்பதி மலையில் ஏறிச் சென்ற கணவனது செயல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கனியபுலங்கா பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததையடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றனர். அப்போது, வேகமாகப் படியில் ஏறிய தன் கணவன் சத்திய நாராயணனிடம் தன்னை தூக்கிக் கொண்டு படியில் ஏறும்படி சவால் விடுத்தார். மனைவி லாவண்யாவின் சவாலை ஏற்று அவரை […]

Continue reading …

நிவின் பாலி படத்தின் டைட்டில் எப்போது அறிவிப்பு?

Comments Off on நிவின் பாலி படத்தின் டைட்டில் எப்போது அறிவிப்பு?

இயக்குனர் ராம் மற்றும் நிவின் பாலி இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இவர்களது திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதி மற்றும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். […]

Continue reading …

குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

Comments Off on குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

உத்தரபிரதேசத்தில் பள்ளியில் மது அருந்திக் கொண்டே பாடம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சைலேந்திர சிங் கவுதம் என்பவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை […]

Continue reading …