
முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஜனதாதளம் கட்சியின் முன்னணி அமைச்சர் மகேஷ் என்பவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மீது பல்வேறு புகார்களை கூறினார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி மீது அமைச்சர் முன்னாள் அமைச்சர் மகேஷ் மான நஷ்ட வழக்கு தொடர்வதாக தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி தனது தோழிகளுடன் பேசிய ஒரு ஆடியோ வெளியானது. […]
Continue reading …
சமூக ஆர்வலர் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியைப் பற்றி புகார் அளித்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி குறித்து காவல்துறையில் புகார் அளித்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் […]
Continue reading …
உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன்னை அடித்த சிறுமியை வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடண்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அச்சிறுமி பள்ளி செல்லும் வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அவரை பாலியல்ரீதியாக சீண்டுவதும், வம்பு இழுப்பதுமாக இருந்துள்ளனர். ஒருநாள் அதுபோல தன்னை சீண்டிய தினேஷ் யாதவ் என்ற […]
Continue reading …
நீதிமன்றம் பள்ளி மாணவ மாணவர்கள் மது குடிப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால் மது விற்பனையை தடை செய்ய நேரிடும் என்றும், இதை செய்யாவிட்டால் மதுவிற்பனை தடை செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 100 யூனிட் இலவச மின்சாரமும் இனி கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார். மின்சார கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மின்சார கட்டணம் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.பி.உதயகுமார், “மின்சார கட்டண உயர்வு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. […]
Continue reading …
உச்சநீதிமன்றம் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கப்பட்டது சரிதான் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக அலுவலகம் கடந்த ஜூலை 11ம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் மனுதாரர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலகத்தின் சாவியை தன்னிடம் […]
Continue reading …
பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 3 கிமீ ஓடியே சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் நந்தகோபால் தான் ஓட்டிச்சென்ற காரை நிறுத்தி ஓடியே மருத்துவமனைக்கு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவர் நந்தகோபால் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் டிராபிக்கில் சிக்கி கொண்டதை அடுத்து அவர் பதட்டமானார். மருத்துவமனை இன்னும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த […]
Continue reading …
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் திரு.ஷண்முகம் (ஷம்ம) மறைவு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரிவுத் தலைவராக பணியாற்றிய ஷண்முகம் @ ஷம்மி ( வயது 52) காலமானார். உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த ஷண்முகம் @ ஷம்மி சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று (10-09-2022) இயற்கை எய்தினார் . நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக பணியாற்றி வந்த ஷண்முகம் நியூஸ் 7 தமிழின் பேசும் […]
Continue reading …
திமுக பிரமுகர் ராஜிவ்காந்தி நீட் தேர்வு என்பது சமூக அநீதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளார். நீட் தேர்வு முறை வேண்டாம் என்பது பற்றி தமிழ் நாடு முன்வைத்துள்ள வாதம் சரியானது. சாதி அதிகளவில் உள்ள இந்தியாவில் 63% ஓபிசி, எம்பிசி மக்கள், பிசி மக்கள், 23% அட்டவணை சாதி மக்கள், மீதி 15% முன்னேறிய மக்கள், 9% உயர்சாதியினர். இத்தனை பாகுபாடுகள் இருந்தாலும் கல்வியில் முன்னேறியுள்ளது தமிழ் நாடு. இந்த நீட் தேர்வில், 21 லட்சம் […]
Continue reading …
தமிழக அரசு ரேஷன்கடையில் பணிபுரியும் பெண் பணியாளருக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலை கடைகளில் ஆறு மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு வருவதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கு மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் கடைகளில் பணிபுரியும் […]
Continue reading …