
ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழாக்காலம் என்பதால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தின. வழக்கமான நாட்களில் சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆம்னி பஸ்களில் ரூ.800 […]
Continue reading …
தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் “விருமன்” திரைப்படத்தை வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அன்று இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது. படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …
“ஷ்யாம் சிங்கா ராய்” திரைப்படம் ஆஸ்கர் பட்டியலின் மூன்று பிரிவுகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் “ஷ்யாம் சிங்கா ராய்” சுமாரான வரவேற்பைப் பெற்றது. 2021ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியான “ஷ்யாம் சிங்கா ராய்” பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராக்கெட்டரி”. அந்த படத்திற்காக செலவிட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை என்று கூறப்பட்டது. மாதவனுக்கு ராக்கெட்டரி படத்தால் நஷ்டம் எற்பட்டதால் அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று விட்டதாக நெட்டிசன்கள் சிலர் செய்திகளை பரப்பினர். இச்செய்திக்கு பதிலளித்துள்ள மாதவன், “நான் சொந்த வீட்டை விற்கவில்லை. நான் என்னுடைய வீட்டில் தான் தற்போது இருக்கிறேன். மேலும் ராக்கெட்டரி படத்தால் நாங்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளோம். இவ்வாண்டு வருமான வரியை நாங்கள் […]
Continue reading …
மிகப்பிரலமான குணச்சித்திர நடிகர் நாசர் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடிகர் நாசர் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பில் அவர் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் நாசருக்கு லேசான காயம்தான் என்றும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் […]
Continue reading …
பாஜக தரப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கவர்னர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை நேற்றுக் கொண்டாடினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் பலதரப்பிலிருந்தும் எழுந்தன. எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் […]
Continue reading …
கல்வித்துறை அமைச்சர் கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமித்தது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். மணிகண்ட பூபதி தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒருவர் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது கட்சியை சேர்ந்தவர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவரது பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என […]
Continue reading …
ஓபிஎஸ் அதிமுக நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வருமாறு ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகராமாகி ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது. அதை தொடர்ந்து ஜூலை 11ல் மீண்டும் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் […]
Continue reading …
பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் கட்டாயம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென பலதரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுவை திமுக அரசு ஏற்படுத்தியது. இந்த குழு வல்லுனர்களிடம் பரிந்துரை பெறுதல், மக்கள் கருத்துகளை கேட்டறிதல் ஆகியவற்றை மேற்கொண்டு இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக […]
Continue reading …
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாங்கள் திமுகவோடு சமரசம் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் செய்துகொள்ளாது. எங்களுக்குள் மத்திய, மாநில அரசு இடையிலான உறவு மட்டுமே உள்ளது. கைகட்டி வாய் பொத்தி நிற்க நான் ஆளில்லை. நான் கலைஞரின் பிள்ளை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “திமுக தரப்பில் பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்களும் அவர்களோடு சமரசம் […]
Continue reading …