
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இத்திரைப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வாரிசு” படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது. சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இயக்குனர் வம்சி, படக்குழுவினர் யாரும் படப்பிடிப்பு […]
Continue reading …
பதவியிலிருந்து விலகும்படி தமிழக கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷை பற்றி சமூக வலைதளங்களில்#Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. திமுக ஆட்சியமைத்த போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வியில் அன்பில் மகேஷ் மேற்கொள்ளும் மாற்றங்கள் விமர்சனத்திற்கு உள்ளாவதும் பின்னர் திரும்ப பெறப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. முன்னதாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மூலமாக செயல்படுத்த எடுக்கப்பட்ட முடிவு கண்டனத்திற்கு உள்ளானதால் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக […]
Continue reading …
குரங்கு அம்மை நோய் மிக வேகமாக இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோய்க்கு குரங்குகள் தான் காரணம் என நினைத்து பல பொதுமக்கள் குரங்குகளை கொன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. புதிய பெயரை இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1958ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு […]
Continue reading …
அனைத்து மொழிகளிலும் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் “சீதாராமம்.” இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. “வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் […]
Continue reading …
மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது “மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் […]
Continue reading …
செஸ் ஒலிம்பியாட் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தற்போது மீண்டும் சர்வதேச போட்டி ஒன்று நடைபெற போவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். முதல்முறையாக சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப் போவதாக இருப்பதாகவும், நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12ம் தேதி சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி துவங்க இருப்பதாகவும் ஒரு வாரம் இப்போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் […]
Continue reading …
தனி ஒரு ஆளாக 13 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் கனடாவைச் சேர்ந்த இளைஞர். உலகில் வெப்ப நிலை அதிகரித்து வருவதோடு அல்லாமல் அண்டார்டிக்கில் பனிப்பாறையில் கணிசமாக உருகிவருவதால்கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. உலகிலுள்ள காடுகள், மரங்கள் எல்லாம் மக்களுக்காகவும் நிறுவனங்களின் தேவைக்காகவும் அழிக்கப்பட்டு, வனங்கள் வர்த்தக நிலங்களாக மாறி வருகிறது. கனடா முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் தனியாக நட்டு சாதனை படைத்துள்ளார். கனடா நாட்டிலுள்ள கியூபெக்கைச் சேர்ந்த இளைஞர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதியை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. “குருவி” திரைப்படத்தை முதன் முதலில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி. பின்னர், சூர்யாவின் “ஆதவன்,” “மன்மதன் அம்பு” உட்பட பல படங்களை தயாரித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஒரு சில படங்கள் மட்டுமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் வெளியிட்டது. அதிமுகவின் 10 ஆண்டுகாலத்திற்குப் பின், கடந்த ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற […]
Continue reading …
இன்றைய இளைய தலைமுறையினர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது பீட்சா. பீட்சாவிற்கான உணவுப் பொருட்களை கழிவறைக்கு அருகில் வைத்திருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் மீது கண்டனம் குவிந்துள்ளது. ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்களின் விருப்ப உணவாக மாறியுள்ளது பீட்சா. இந்தப் பீட்சாவுக்கு என பிரத்யேக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மக்கள் குவிகின்றனர். இந்தக் கொரோனா காலத்தில், இது ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, சோமோட்டா, ஓலா, ஓபர் உட்பட நிறுவனங்கள் மூலம் […]
Continue reading …