Home » Entries posted by Shankar U (Page 481)
Entries posted by Shankar

டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

Comments Off on டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

நடிகர் அஜீத் பற்றிய ஹேஸ்டெக்கை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். நடிகர் அஜீத் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டுவிட்டர் பக்கத்தில்,#AjithTheMonarchOfTN என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ஒரு விழாவில் தன் மனதில் பட்டதை அஜீத்குமார் பேசினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுந்து நின்று கை தட்டினார். அன்றைய காலத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அஜீத்தின் தைரியத்தைப் […]

Continue reading …

ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தின விழாவாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறும் அசிரியர்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகளுடம் தொடர்பில் இருந்தால் விருது பரிந்துரையில் இடம்பெறாது. வணிக ரீதியில் கற்பிக்கும் […]

Continue reading …

எம்.பி மாயத்தேவர் மறைவு!

Comments Off on எம்.பி மாயத்தேவர் மறைவு!

முதல் முறை அதிமுக கட்சியின் முதல் எம்.பியும், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவருமான மாயத்தேவர் இன்று காலமானார். கடந்த 1972ம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கட்சியில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டப்பின் தனியாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கி சில நாட்களிலேயே திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்ததால் அப்பகுதியில் எம்.பி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அச்சமயம் திமுகவை வெல்ல நினைத்த அதிமுக […]

Continue reading …

பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு!

Comments Off on பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு!

பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல்வரானார் நிதிஸ்குமார். இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் அரசியலில் பாஜக -மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளிடையே நீண்ட காலமாக மோதல் இருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்குமிடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் […]

Continue reading …

“இந்தி படத்தையாவது விட்டுவிடலாம்!”

Comments Off on “இந்தி படத்தையாவது விட்டுவிடலாம்!”

இந்த ஆண்டு தொடர்ச்சியாக முன்னணி கலைஞர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள “லால் சிங் சத்தா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப்பின் இத்திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவ்வாண்டு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு வருகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் […]

Continue reading …

மர்மமாக சுற்றிய சிறுவன்!

Comments Off on மர்மமாக சுற்றிய சிறுவன்!

மர்மமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் பிடித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீசார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், […]

Continue reading …

பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

Comments Off on பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு தேதியை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25ம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் […]

Continue reading …

தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

Comments Off on தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். மின்சார சட்டத் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மின்சார சட்டத் திருத்த […]

Continue reading …

புதிய நகைக்கடையில் கைவரிசை!

Comments Off on புதிய நகைக்கடையில் கைவரிசை!

கள்ளக்குறிச்சி அருகே புதிய நகைக்கடை திறந்து இரண்டே நாட்களில் திருடர்கள் கடையையே காலி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் நகைக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்த 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்த வயர்களையும் துண்டித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து […]

Continue reading …

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Comments Off on முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டிப் பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் ரயில் நிலையமருகே பேருந்து ஒன்று மோதியதில் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. பேருந்து ஆட்டோ உள்ளிட்டவைகளும் சேதமடைந்தது. வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூபாய் […]

Continue reading …