Home » Entries posted by Shankar U (Page 493)
Entries posted by Shankar

மனம் வருந்திய லால்!

Comments Off on மனம் வருந்திய லால்!

விளம்பரத்தில் நடித்தது குறித்து வருத்தத்தை தெரிவித்துள்ளார் பிரபலமான துணை நடிகர் லால். “சண்டக்கோழி,” “மருதமலை” உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் லால். இவர் சமீபத்தில் வெளியான “கர்ணன்” உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் இவர் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோசடி செய்யும் ஆன்லைன் விளையாட்டின் விளம்பரத்தில் லால் நடித்திருப்பது குறித்து பலர் ஆட்சேபணை செய்தனர். இந்த விளம்பரம் குறித்து லால், “கொரோனா ஊரடங்கின்போது […]

Continue reading …

திரவுபதி முர்மு குடியரசு தலைவராகிறார்!

Comments Off on திரவுபதி முர்மு குடியரசு தலைவராகிறார்!

திரவுபதி முர்மு 70 சதவீதம் வாக்குகள் பெற்று குடியரசு தலைவராகிறார். இன்று காலை 11 மணி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு முன்னிலையில் இருக்கிறார். சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாம் சுற்று முடிவில் திரவுபதி முர்மு 70 சதவீத வாக்குகளை பெற்று உள்ளதால் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டதாக […]

Continue reading …

ஆடிகிருத்திகைக்கு சிறப்பு ரயில்!

Comments Off on ஆடிகிருத்திகைக்கு சிறப்பு ரயில்!

தெற்கு ரயில்வே ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆடிக்கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களின் வசதியை முன்னிட்டு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை முதல் ஜூலை 25ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 43407/43418) அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் […]

Continue reading …

நீட் தேர்வு விவகாரம்: 5 பெண்கள் கைது!

Comments Off on நீட் தேர்வு விவகாரம்: 5 பெண்கள் கைது!

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களையச் சொன்ன 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேரளாவில் நீட் தேர்வு எழுத கடந்த ஞாயிறன்று வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் […]

Continue reading …

சிலைகள் கடத்த முயற்சி!

Comments Off on சிலைகள் கடத்த முயற்சி!

பல கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அச்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கும்பகோணத்தில் ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் என்ற கடையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு அச்சிலைகள் வெளிநாட்டிற்கு ஆவணமின்றி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் கடையில் சிலை தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

Continue reading …

மதிப்பெண் கூட்டலில் குளறுபடி!

Comments Off on மதிப்பெண் கூட்டலில் குளறுபடி!

தமிழகத்தில் நடைபெற்ற +2 தேர்வின் மதிப்பெண் கூட்டலில் தவறு செய்ததாக ஆசிரியர்கள் தேர்வு துணை இயக்குனரிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் உடனடியாக தேர்வு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 85 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மதிப்பெண் கூட்டலில் ஏற்பட்ட தவறு காரணமாக ஐம்பத்தி ஐந்து மதிப்பெண் என்றும், 76 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெறும் ஆறு மதிப்பெண்கள் என்றும் ஆசிரியர்கள் தவறாக பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் […]

Continue reading …

நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்!

Comments Off on நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்!

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடிப்பவர். இவர் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது சம்பளம் குறித்த முக்கிய தகவல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “நான் ஒரே மாதிரியான கேரக்டர் ரோல்களில் நடிக்க விரும்புவதில்லை. நான் நடித்து வெளியான “காஞ்சிவரம்,” “இருவர் பொம்மரிலு,” “ஆகாச மந்தா,” “மேஜர்” ஆகிய திரைப்படங்களில் ஒரு வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது […]

Continue reading …

அடுத்த 3 நாட்களுக்கு மழை!

Comments Off on அடுத்த 3 நாட்களுக்கு மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் இன்று கனமழைக்கு […]

Continue reading …

விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Comments Off on விஜயபாஸ்கர் மீது வழக்கு!

தமிழக அரசுக்கு குட்கா ஊழல் தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உட்பட 12 பேரை விசாரிக்க சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. […]

Continue reading …

வருமான வரித்துறை சோதனை!

Comments Off on வருமான வரித்துறை சோதனை!

வருமான வரித்துறை தமிழகத்தில் இன்று திடீரென்று 20 அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். வருமானவரித் துறையினர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது தமிழகத்திலுள்ள பிரபலங்களின் வீடுகளில் மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர். மதுரை, […]

Continue reading …