Home » Entries posted by Shankar U (Page 496)
Entries posted by Shankar

அதிமுக ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன்!

Comments Off on அதிமுக ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன்!

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமையகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை செய்யவே இச்சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நாளை மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனில் ஆஜராகும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரணை செய்த பின்னரே கைது நடவடிக்கை குறித்து தகவல் வெளிவரும்.

Continue reading …

ரயிலில் செல்பி: மாணவன் பலி!

Comments Off on ரயிலில் செல்பி: மாணவன் பலி!
ரயிலில் செல்பி: மாணவன் பலி!

ரயிலின் மீது ஏறி செல்பி மீது உள்ள மோகம் ஒரு மாணவனின் உயிரை வாங்கி உள்ளது. மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வர் 12ம் வகுப்பு படிக்கிறார். விக்னேஷ்வர் நேற்று தனது நண்பர்கள் சிலருடன் கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களில் ஏறிய விக்னேஷ்வர் மற்றும் நண்பர்கள் செல்பி எடுத்துள்ளனர். விக்னேஷ்வர் ஒரு ரயிலின் மேல் பகுதிக்கு ஏறிய போது ரயிலின் மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் […]

Continue reading …

ஓட்டு போடாமல் திரும்பிய ஓபிஎஸ்!

Comments Off on ஓட்டு போடாமல் திரும்பிய ஓபிஎஸ்!

ஓபிஎஸ் குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஓட்டு போட சென்று பாதி வழியிலேயே திரும்பி சென்றார். இந்திய குடியரசு தலைவருக்கான இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும் அரசு தலைமையகம் […]

Continue reading …

பங்குச்சந்தை உயர்வு!

Comments Off on பங்குச்சந்தை உயர்வு!

பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் முதலீட்டார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் முழுவதும் பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால், இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து உள்ளது. 54 ஆயிரத்து 175 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 125 புள்ளிகள் அதிகரித்து 16175 என வர்த்தகமாகி வருகிறது. […]

Continue reading …

நடிகர் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்!

Comments Off on நடிகர் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்!

எஸ்.ஜே. சூர்யா விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “வாரிசு” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. “வாரிசு” படத்தைப் […]

Continue reading …

”பொன்னியின் செல்வன்” படத்திற்கு வக்கீல் நோட்டீஸ்!

Comments Off on ”பொன்னியின் செல்வன்” படத்திற்கு வக்கீல் நோட்டீஸ்!

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தனக்கு திரையிடப்பட்டு காண்பிக்காமல் வெளியிடக்கூடாது என்று வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மணிரத்னம் இயக்கி ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் “பொன்னியின் செல்வன்.” இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் திடீரென வக்கீல் ஒருவர் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “பொன்னியின் செல்வன்” படத்தில் வரலாற்று உண்மைகள் […]

Continue reading …

உலகின் முதல் நான்லீனியர் படம் இல்லை!

Comments Off on உலகின் முதல் நான்லீனியர் படம் இல்லை!

உலகில் முதன் முதலில் சிங்கிள் ஷாட்டில் நான்லீனியர் திரைப்படம் ஏற்கனவே வெளியாகி விட்டது என்று புளூசட்டை மாறம் கூறியுள்ளார். சமீபத்தில் பார்த்திபன் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது “இரவின் நிழல்” படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது என புளூசட்டை மாறன் கூறியுள்ளார். கடந்த 2013ம் […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டில் புதிய கட்டுப்பாடுகள்!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டில் புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கு கொள்ளவிருக்கும் வீரர்கள் அனைவருக்கும் குரங்கம்மை சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்பாட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

Comments Off on செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் […]

Continue reading …

மாணவி தற்கொலை!

Comments Off on மாணவி தற்கொலை!

மாணவி ஒருவர் நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டார். அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue reading …