Home » Entries posted by Shankar U (Page 498)
Entries posted by Shankar

பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!

Comments Off on பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!

இன்று இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் நடந்த காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார். சீனா வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 – 21, 21 – 11 , 21 – 19 என்ற செட் கணக்கில் […]

Continue reading …

பில்கேட்ஸின் அதிரடி முடிவு!

Comments Off on பில்கேட்ஸின் அதிரடி முடிவு!

பில்கேட்ஸ் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் நன்கொடையாக வழங்க முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பில் மற்றும் மெலிண்டா என்ற அறக்கட்டளையை பில்கேட்ஸ் ஆரம்பித்து அதற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். “எதிர்காலத்தில் எனது குடும்பத்திற்கு நான் என்னுடைய பணத்தை செலவழிப்பதை விட அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளேன். இதை நான் தியாகமாக நினைக்கவில்லை. உலக மக்கள் பெரும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இதை எனது கடமையாக நினைக்கிறேன்” என்று […]

Continue reading …

நிதி கொடுத்த முதலமைச்சர் தூக்கியெறிந்த பெண்!

Comments Off on நிதி கொடுத்த முதலமைச்சர் தூக்கியெறிந்த பெண்!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ரூ.2 லட்சம் நிதி கொடுத்துள்ளார். அந்த பணத்தை அப்பெண் தூக்கி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில பாதாமி என்ற தொகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ரூபாய் 2 லட்சம் நிதியுதவியளித்தார். ஆனால், அப்பணத்தை அவர் சித்தராமையா காரின் முன் தூக்கி எறிந்தார். “பணத்தைவிட எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்று கூறியபடி அவர் […]

Continue reading …

டில்லியில் குடோனில் விபத்து!

Comments Off on டில்லியில் குடோனில் விபத்து!

டில்லியில் குடோன் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் அலிபூர் என்ற இடத்தில் உள்ள குடோனின் சேமிப்புக்கிடங்கில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

அண்ணன் மனைவிக்கு அரிவாள் வெட்டு

Comments Off on அண்ணன் மனைவிக்கு அரிவாள் வெட்டு

பெரியகுளம் அருகே அண்ணன் மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்த நபர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜூ (55) என்பவர்,அவரது அண்ணன் வெள்ளைச்சாமியின் மனைவி ராமுத்தாய் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் இடத்தகராறு காரணமாக மின்சார இணைப்பு பெயர் மாற்றுவது சம்பந்தமாக அண்ணன் வெள்ளைச்சாமியின் பேரில் இருக்கும் மின்சார இணைப்பை ராஜு பெயருக்கு மாற்றி தரவில்லை […]

Continue reading …

சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

Comments Off on சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

நாளை காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் 22வது படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர். படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு “மாவீரன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சிவகார்த்திகேயன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்கும் இப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த “மண்டேலா” என்ற படத்தை இயக்கிவுள்ளார்.

Continue reading …

நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட் பதிவால் பரபரப்பு!

Comments Off on நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட் பதிவால் பரபரப்பு!

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்த நாடு எங்கே செல்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இச்சின்னத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் “இந்த நாடு எங்கே செல்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முன் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னம் புகைப்படங்களை பதிவு செய்த அவர் தற்போது இருக்கும் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னத்தை பதிவு […]

Continue reading …

“சின்னவர் என்று சொன்னால் பலருக்கு வயிற்றெரிச்சல்”

Comments Off on “சின்னவர் என்று சொன்னால் பலருக்கு வயிற்றெரிச்சல்”

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கூட்டத்தில் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரார். உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது. எங்கு திமுக நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், […]

Continue reading …

சித்ரா ராமகிருஷ்ணா கைது

Comments Off on சித்ரா ராமகிருஷ்ணா கைது

அமலாக்கத்துறை பங்குச்சந்தை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சிபிஐ போலீசார் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பங்குச்சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோலோகெஷன் என்ற வசதி 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி சில சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இநிலையில் கடந்த […]

Continue reading …

அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். மகன்கள் நீக்கம்!

Comments Off on அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். மகன்கள் நீக்கம்!

அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் மகன்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் […]

Continue reading …