Home » Entries posted by Shankar U (Page 515)
Entries posted by Shankar

வங்கியில் வேலைவாய்ப்பு!

Comments Off on வங்கியில் வேலைவாய்ப்பு!

ஐடிபிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் ஏனைய தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100, எஸ், எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடக்கும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்பு மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு எழுத செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பம் அனுப்ப ஜூன் 17ம் தேதி கடைசி நாளாகும்.

Continue reading …

ஈரோட்டில் அதிர்ச்சி!

Comments Off on ஈரோட்டில் அதிர்ச்சி!

ஈரோட்டில் திடீரென வானத்தில் கேட்ட பயங்கர வெடி சத்தமும், அதை தொடர்ந்து புகை மூட்டமும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஈரோடு மாவட்டம், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கரமான வெடிசத்தம் கேட்டுள்ளது. வெடிசத்தத்தை கேட்ட அடுத்த சில மணித்துளிகளிலேயே வீட்டின் கூரைகள் வேகமாக அதிரத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் பதறிய வண்ணம் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் வானில் வட்ட வடிவிலான புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது. […]

Continue reading …

நெட்டிசைன்களின் கேலி; பிரேமலதா பதிலடி!

Comments Off on நெட்டிசைன்களின் கேலி; பிரேமலதா பதிலடி!

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது திமுக கட்சி ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எது என்ற குழப்பம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் நீடித்த வண்ணம் உள்ளது. அதிமுக கட்சியில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள்தான் உண்மையான எதிர்கட்சி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்கள் தேவையின் அடிப்படையில் நாங்கள் […]

Continue reading …

பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

Comments Off on பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

சென்னை மாநகராட்சி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு […]

Continue reading …

டப்பிங்கில் களமிறங்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Comments Off on டப்பிங்கில் களமிறங்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தமிழ் திரைப்படத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்து வருவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படம் இயக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலையில் உள்ளார். கூடிய விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழ் படம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். டப்பிங் செய்யும்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இவர் […]

Continue reading …

ரஜினி 169!

Comments Off on ரஜினி 169!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் வேலையில் முனைப்புடன் இருக்கிறார் நெல்சன். சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் “பீஸ்ட்” திரைப்படம் ரிலீசுக்கு பிறகு கதை கலந்துரையாடலின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவில்லை என கூறப்படுகிறது. ரஜினி 169 படத்தில் அவரது இளமைக் […]

Continue reading …

தனுஷ் படத்தின் அறிவிப்பு!

Comments Off on தனுஷ் படத்தின் அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்’’ திரைப்படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர். அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்ற திரைப்படம். இப்படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னரே கூறியிருந்தார். அதில் “இப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் […]

Continue reading …

நிதியமைச்சர் பழனிவேலின் அறிவிப்பு!

Comments Off on நிதியமைச்சர் பழனிவேலின் அறிவிப்பு!

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான பணி நடந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியின்படி குடும்பத்தலைவிகளுக்கு எப்போது மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்ற கேளவிகள் எழுந்த நிலையில், இதுகுறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு […]

Continue reading …

6 மணி நேரத்தில் 24 முட்டையா?

Comments Off on 6 மணி நேரத்தில் 24 முட்டையா?

கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது கேரள மாநிலத்தில் உள்ள ஒருவரது கோழி. இந்த அதிசய கோழி கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவருடையது. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேல் தீஸ்-380 வகையைச் சேர்ந்த கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார். அதில் சின்னு என பெயரிடப்பட்டுள்ள ஒரு கோழி காலை சுமார் 8.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை 24 முட்டைகளை போட்டுள்ளது. […]

Continue reading …

ரத்தம் தேவைக்கு அழைக்கவும்!

Comments Off on ரத்தம் தேவைக்கு அழைக்கவும்!

உலக நாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருக்கும் பட்சத்தில் ரத்தம் தேவைப்படுவோர் அணுக வேண்டிய எண்ணை அறிவித்துள்ளார். இதுபற்றிய ஓர் அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் […]

Continue reading …