Home » Entries posted by Shankar U (Page 521)
Entries posted by Shankar

சோனியாவின் மகளுக்கும் கொரோனா

Comments Off on சோனியாவின் மகளுக்கும் கொரோனா

நேற்றைய தினம் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தன்னைத்தானே அவரது வீட்டில் அவரை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 2024ம் வரவிருக்கும் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை பிரியங்கா காந்தி கலந்து ஆலோசித்து வருகிறார். பிரியங்கா காந்தி […]

Continue reading …

திருவிழாக்களில் நாடகங்களுக்கு அனுமதி!

Comments Off on திருவிழாக்களில் நாடகங்களுக்கு அனுமதி!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோவில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகங்களை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கருப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவின்போது கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் பாடல் […]

Continue reading …

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

Comments Off on கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, திமுகவின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு […]

Continue reading …

முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

Comments Off on முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவில், மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, தக்காராக எல்.ஆதிமூலம் அவர்கள் உள்ளார். கோவிலின் துணை ஆணையராகவும், செயல் அலுவலராகவும் முல்லை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கோவிலில் பொறுப்பேற்ற நாள் முதல், கோவில் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. முக்கிய இலாகாவை வைத்திருக்கும் தமிழக அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு நெருக்கமானவராக கருதப்படும் முல்லை, சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாக, அவரின் கீழ் பணியாற்றிய பலர் […]

Continue reading …

நடிகர் சங்க நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு!

Comments Off on நடிகர் சங்க நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து ரஜினிகாந்தை சற்றுமுன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாக உள்ளது. நாசர், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விவாதிப்பதாக கூறப்படுகிறது.

Continue reading …

சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா அஜித்?

Comments Off on சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா அஜித்?

அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவி உள்ளது. சூப்பர் ஸ்டாரை தினமும் பலரும் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுபற்றி அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது, “அஜித் மற்றும் -ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகவல் பொய்யானது. இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது” என்று தெரிவித்தார்.

Continue reading …

திரைப்படத்திற்கு தடை விதித்தது குவைத்!

Comments Off on திரைப்படத்திற்கு தடை விதித்தது குவைத்!

திரைப்படத்தில் சர்ச்சை மிகுந்த காட்சிகள் இருப்பதால் நடிகர் விஜய் நடித்து வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட தடை விதித்தது. தற்போது மேலும் ஒரு இந்தியப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் “சாம்ராட் பிரித்விராஜ்” என்ற திரைப்படத்திற்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளன. இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Continue reading …

ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

Comments Off on ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து பேசப்படலாம் என்றும் பேசப்படுகிறது. நீட் தேர்வு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Continue reading …

கல்விக் கொள்கைக்கு அரசாணை!

Comments Off on கல்விக் கொள்கைக்கு அரசாணை!

தமிழ்நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை திட்டங்களை ஏற்க முடியாது என்று கூறி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் […]

Continue reading …

நாளை முதல் சென்னையில் மலர் கண்காட்சி!

Comments Off on நாளை முதல் சென்னையில் மலர் கண்காட்சி!

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஏராளமான மலர்கள், மலர்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மலர்க் கண்காட்சி நாளை முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 […]

Continue reading …