நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியால் இயக்குனர் பாலாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குனர் பாலா கடைசியாக இயக்கி வெளியான படம் “நாச்சியார்.” அதன் பிறகு அவர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப்படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யா, பாலா […]
Continue reading …சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். எனது கட்சித் தொண்டர் இந்த கல்லூரியின் சுவரில் போஸ்டர் ஒட்டியதால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன் என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். விழாவில் முதலமைச்சர் பேசும் போது, “லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஒளியேற்றி உள்ளது. மாணவிகளின் தனித்திறமைக்கு கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்லூரி சென்ற போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றுள்ளேன். நான் […]
Continue reading …வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் “விடுதலை.” இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக அவதாரமெடுக்கிறார். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு […]
Continue reading …“அக்னி சிறகுகள்” திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை “மூடர் கூடம்“ படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்ஷரா ஹாசனை புக் செய்துள்ளனராம் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது […]
Continue reading …போலீசார் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி பாலசந்தர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ரவுடிகளான பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் மற்றும் ரவுடி கலைவாணன் உள்ளிட்ட 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரையும் […]
Continue reading …தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் கூட்டாக சேர்ந்து 12 மாவட்டங்களில் அடுத்தடுத்து கொள்ளை அடித்ததால் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளைகள் நடந்து வருவதை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் தெலுங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா- பாரதி, மணி -மீனா, விஜய் லட்சுமி ஆகிய 3 தம்பதியினர் இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்கம் […]
Continue reading …அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 18 மாணவர்கள் 1 ஆசிரியர் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம் மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை குறைக்க துப்பாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் […]
Continue reading …இயக்குநர் ராம்கோபால் வர்மா அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது பணம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு இளம் பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இயக்குனர் ராம்கோபால் வர்மா, திஷா என் கவுண்டர் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். படத்திற்கு, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ.56 லட்சம் […]
Continue reading …தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து மனைவியிடம் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டையில் இருப்பவர் சுகுமார்(28). இவர் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாப்பர்ஸ் விஷ்ணுபிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுகுமார் தந்தை தேவரா மற்றும் தாயார் குருவராணி ஆகியோர் ஜாப்பர்ஸிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் சுகுமார் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை […]
Continue reading …