“டான்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. “டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகியது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் போன்ற காட்சிகள் அதிகமாகவே இருக்கிறத. மேலும் இந்த டிரெயிலர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் “சினிமாவில் இப்போது ரெண்டு டான் […]
Continue reading …ஜூன் 9ம் தேதி திருப்பதியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று வரை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளமான இருக்கிறார்கள். அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது மக்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதிலும் நயன்தாராவின் திருமணம் குறித்த […]
Continue reading …நாளை மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இம்முகாம் 2 கோடி பேரை இலக்காக வைத்து நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இதனால் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமானில் உருவான […]
Continue reading …மஹாராஷ்டிர மாநிலமான மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இதில், யாரும் பாதிக்கப்படவில்லை எனவும், விபத்தில் சிக்கவில்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2வது தளத்தில் இயங்கி வந்த சம்பள சேமிப்புத் திட்டம் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகள் எரிந்தன. இந்த விபத்திற்கான […]
Continue reading …தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புறநகர் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை புறநகர் ரயிலில் தற்போது சாதாரண பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே உடன் கூட்டுச்சேர்ந்து முயற்சிகள் நடைபெறும் என்றும் பிடிஆர் […]
Continue reading …அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். சென்னை மாநகரில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் […]
Continue reading …தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டிற்கான முதுநிலை படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், இந்த தேர்வை ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர், இக்கோரிக்கையை ஏற்று ஜூலை 9ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதன் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிக்கை தகவல் மையம் ஒரு ஆய்வு செய்ததில், […]
Continue reading …நயன்தாரா நடிக்கும் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் “ஓ2” என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இந்த படத்தை ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கி […]
Continue reading …“டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என காட்சிகள் அதிகமாக உள்ளன. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும் இருக்கிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Continue reading …