Home » Entries posted by Shankar U (Page 543)
Entries posted by Shankar

பேத்திகளால் எரித்து கொல்லப்பட்ட பாட்டி!

Comments Off on பேத்திகளால் எரித்து கொல்லப்பட்ட பாட்டி!

தன் பாட்டியையே எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை பேத்திகள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசிய இடைத்தரகர்!

Comments Off on முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசிய இடைத்தரகர்!

கர்நாடக பாஜக எம்எல்ஏ ரூபாய் 2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசியலில் இடைத்தரகர்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது டெல்லியில் இருந்து ஒரு இடைத்தரகர் வந்ததாகவும் அவர் தன்னிடம் 2500 கோடி ரூபாய் தயாராக வைத்திருங்கள் உங்களை முதலமைச்சர் காட்டுகிறேன் […]

Continue reading …

பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை அறிவித்தது

Comments Off on பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை அறிவித்தது

பள்ளி கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் அன்று அரை நாள் மட்டும் தேர்வு எழுத பள்ளிக்கு இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என்றும் விடுமுறைக்கு பின் […]

Continue reading …

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

Comments Off on தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விக்னேஷ் மரண வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.   விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் […]

Continue reading …

நாகையில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

Comments Off on நாகையில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் இன்று கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெட்டுபோன இறைச்சிகள் இறைச்சிக்கடைகளிலும், ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருவது கோழிக்கறியை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

அரவிந்த் சாமி, விஜய் சேதுபதியின் திரைப்படம் அப்டேட்!

Comments Off on அரவிந்த் சாமி, விஜய் சேதுபதியின் திரைப்படம் அப்டேட்!

காந்தி டாக்ஸின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம்தான் இது.   விஜய்சேதுபதி தன் கைவசம் 10 திரைப்படங்கள் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம். இப்போது அவர் மௌனப்படமாக உருவாகும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங்க் பெலேகார் இயக்குகிறார். கடந்த ஆண்டே இத்திரைப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. […]

Continue reading …

கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

Comments Off on கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 50க்கும் குறைவான இருந்து வந்த நிலையில் இன்று சற்றே அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,54,217 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,172 56 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் […]

Continue reading …

இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது திமுக

Comments Off on இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது திமுக

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 2020ம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத்திறன் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், வருகிற மே 7ம் தேதியுடன் திமுக ஆட்சி […]

Continue reading …

பேருந்துகளில் 5 வயது குழந்தைகளுக்கு கட்டணமில்லை!

Comments Off on பேருந்துகளில் 5 வயது குழந்தைகளுக்கு கட்டணமில்லை!

அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலுரை ஆற்றி வருகிறார். அவர் பேசியதாவது:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். அதோடு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு […]

Continue reading …

மதுரையில் 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை

Comments Off on மதுரையில் 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு எழுத பயம் என்பதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்று தேர்வு எழுதினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசி வழங்கி வழியனுப்பினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு […]

Continue reading …