Home » Entries posted by Shankar U (Page 557)
Entries posted by Shankar

தன் காருக்கு தானே தீ!

Comments Off on தன் காருக்கு தானே தீ!

பாஜக பிரமுகர் ஒருவர் தனது காருக்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.   சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் என்பவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது. இந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது சதீஷ்குமாரே காருக்கு தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்தபோது காரைவிற்று […]

Continue reading …

“பீஸ்ட்” படத்தின் 2ம் பாகமா?

Comments Off on “பீஸ்ட்” படத்தின் 2ம் பாகமா?

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “பீஸ்ட்”. இத்திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.   ரூ.150க்கும் கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 13ம் தேதி ரிலீனாது. இந்நிலையில், “பீஸ்ட்” திரைப்படத்தின் 2 வது பாகம் எடுக்க வாய்ப்புள்ளதாக இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார், மேலும், இப்படம் 2வது பாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் எனவும், அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் […]

Continue reading …

தெற்கு ரயில்வே கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் பற்றி அறிவிப்பு!

Comments Off on தெற்கு ரயில்வே கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் பற்றி அறிவிப்பு!

தெற்கு ரயில்வே தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத்துறை திரும்ப வருவதற்கு 17ம் தேதி […]

Continue reading …

தாதர் விரைவு ரயில் விபத்து!

Comments Off on தாதர் விரைவு ரயில் விபத்து!

புதுச்சேரி தாதர் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மும்பையின் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும், அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு […]

Continue reading …

பக்தர்களுக்கு வைகையில் அனுமதி இல்லை!

Comments Off on பக்தர்களுக்கு வைகையில் அனுமதி இல்லை!

பக்தர்களுக்கு கள்ளழகர் எழுந்தருளல் திருவிழாவில் வைகையில் இறங்க அனுமதி இல்லை.   மதுரையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிலையில் இந்த வைபவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வழிபடும் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை காண பக்தர்களுக்கு அனுமதி […]

Continue reading …

நரிக்குறவ மாணவிக்கு உணவு ஊட்டிய முதலமைச்சர்!

Comments Off on நரிக்குறவ மாணவிக்கு உணவு ஊட்டிய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருமுல்லைவாயலில் குடியிருக்கும் நரிக்குறவர் இன மக்களை சந்தித்தார்.   அப்போது அவர் குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குறவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இது மட்டுமின்றி அங்கு மாணவிகளின் வீட்டில் இட்லி மற்றும் வடை சாப்பிட்டு மாணவிகளுக்கு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப […]

Continue reading …

எம்.பி. அன்புமணி வருத்தம்!

Comments Off on எம்.பி. அன்புமணி வருத்தம்!

எம்.பி.அன்புமணி 25 மருத்துவ இடங்கள் யாருக்கும் பயனில்லாமல் போனது என்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.   “அகில இந்திய தொகுப்புகளில் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 24 இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போனது” என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் […]

Continue reading …

அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வு!

Comments Off on அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அம்பத்தூரில் உள்ள டி1 போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, அம்பத்தூரில் டி1 போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட ஒழுங்கு ஆய்வாளரின் அறையில் அமர்ந்து, பொதுமக்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue reading …

மூன்றாவது பாகம் எதிர்பார்க்கலாம்!

Comments Off on மூன்றாவது பாகம் எதிர்பார்க்கலாம்!

தமிழ் வருடப்பிறப்புக்கு வெளியான “கேஜிஎப் 2” திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் கடைசியில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப்-பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக […]

Continue reading …