Home » Entries posted by Shankar U (Page 557)
Entries posted by Shankar

இந்தியாவில் 26,041 பேர் கொரோனாவால் பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 26,041 பேர் கொரோனாவால் பாதிப்பு

புதுடெல்லி, செப் 27: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,041 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,041 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,621 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]

Continue reading …

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு

Comments Off on புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு

புதுடெல்லி, செப் 27: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தில், போதிய இடவசதி இல்லாததால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை உருவாக்கி அதன் கட்டுமான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு அருகிலேயே, ரூ.971 […]

Continue reading …

4 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Comments Off on 4 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, செப் 25: “திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன், திமுக சார்பில், 500க்கும் அதிகமான வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களிடமும், தாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். […]

Continue reading …

பாடும் நிலா எஸ்.பி.பி.,யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

Comments Off on பாடும் நிலா எஸ்.பி.பி.,யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

சென்னை, செப் 25: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் திரைத்துறையில், பாடும் நிலா என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டவராக, அவர்களின் அன்பு மழையில் நனைந்து வந்தார். 1966ல் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான எஸ்.பி.பி, முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. பின், 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி […]

Continue reading …

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐ.ஐ.டி., பட்டதாரி முதலிடம்

Comments Off on யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐ.ஐ.டி., பட்டதாரி முதலிடம்

புதுடெல்லி, செப் 25: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் மும்பை ஐ.ஐ.டி. இன்ஜினியரிங் பட்டதாரி சுபம்குமார் முதலிடம் பிடித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு […]

Continue reading …

வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்

Comments Off on வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்

சென்னை, செப் 25: ‘வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ‘குலாப்’ புயல் உருவாகும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை […]

Continue reading …

இந்தியாவில் 29,616 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 29,616 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

புதுடெல்லி, செப் 25: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,046 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]

Continue reading …

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

Comments Off on குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

வாஷிங்டன், செப் 25: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பின், குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நேற்று நடந்தது. அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த அந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் […]

Continue reading …

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

Comments Off on குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

புதுடெல்லி, செப் 24: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்துப் பேசினார். தமிழக ஆளுநராக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் ஆளுநருமான ஆர்.என். ரவி, சமீபத்தில் பதவி ஏற்றார். ஆளுநராக பொறுப்பேற்றபின், டில்லிக்கு சென்று ஜனாதிபதியை சந்திப்பது ஒரு மரபாகும். அதன்படி, தமிழக ஆளுநர், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இவர் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், […]

Continue reading …

தேசிய நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்

Comments Off on தேசிய நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்

புதுடெல்லி, செப் 24: டெல்லியில், 2019-20ஆம் ஆண்டிற்கான தேசிய நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காணொலி மூலம், சிறந்த சேவை புரிந்தோருக்கு இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்டுதோறும், செப்டம்பர், 24ம் தேதி, தேசிய நலப்பணித் திட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ் சிறப்பான சேவை புரிந்த பல்கலைக்கழகம்/பன்னிரண்டாம் வகுப்பு குழுக்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு […]

Continue reading …