யுடியூபில் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது “பீஸ்ட்” திரைப்படத்தின் “அரபிக்குத்து” பாடல். விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அரபிக்குத்து” பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “அரபிக்குத்து” பாட்டு […]
Continue reading …நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமண செய்தியை சமூகவலைதளத்தில் தெரிவிவித்துள்ளார். நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்தது. அதனால் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் பலியானது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சோகத்துடன் இருந்தார். சிகிச்சையில் முழுவதும் குணமாகிவிட்ட […]
Continue reading …“பீஸ்ட்” திரைப்படத்தை தன் தந்தைக்கு காட்ட முடியாமல் போனது குறித்து டைரக்டர் நெல்சன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார். “பீஸ்ட்” படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் பீஸ்ட் படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், “எனது அப்பாதான் நான் […]
Continue reading …சென்னை, மார்ச் 31- பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என வருமானவரித்துறை கூறியுள்ளது. இதற்கான கால அவகாசத்தை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து வருமானவரித்துறை நீட்டித்து வந்தது. இந்த இணைப்புக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்றைக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத கணக்குகளின் பான் எண் செயலிழந்துவிடும் என்றும், இதற்கு பின் பான் எண்ணை புதுப்பிக்கவும், ஆதார் எண்ணை இணைக்கவும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அறிவிப்பு […]
Continue reading …புதுடில்லி, அக் 4: வெளிநாடுகளில் அதிகமான சொத்து குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்களின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம், உலகையே பரபரக்க செய்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம், […]
Continue reading …சென்னை, அக் 4: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (04.10.2021) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் மூன்றாம் நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடைபயணத்தை, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் திருமதி கருணப்பிரியா, வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திரு.நாகநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒரு […]
Continue reading …சென்னை, அக் 4: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு, சென்னையில் இருந்து, 5, 8ம் தேதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை சேர்ந்த […]
Continue reading …லக்கிம்பூர், அக் 4: உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நேரில் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும், விவசாயிகள் இத்தகைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள […]
Continue reading …புதுடெல்லி, அக் 4: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 20,799 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 20,799 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,31,21,247ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரே நாளில், […]
Continue reading …சென்னை, அக் 4: பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், பிக் பாஸ் சீசன் – 5 நேற்று கோலாகலமாக துவங்கியது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா, நேற்று மாலை, 6 மணிக்கு துவங்கியது. துவக்க விழாவில், இந்த சீசனில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் கமல்ஹாசனால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். பின், அவர்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். […]
Continue reading …