Home » Entries posted by Shankar U (Page 568)
Entries posted by Shankar

ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

Comments Off on ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

துபாய், அக் 4: ஐ.பி.எல். தொடரில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவரில் […]

Continue reading …

வன உயிரின வார விழா: சென்னையில் சைக்கிள் பேரணி

Comments Off on வன உயிரின வார விழா: சென்னையில் சைக்கிள் பேரணி

சென்னை, அக் 3: சென்னை, பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகில் இன்று (03.10.2021) காலை, உயிரின வாரவிழாவை முன்னிட்டு, வனத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பேரணி நடந்தது. இதை, தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திடவும், வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வனஉயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, […]

Continue reading …

மகாத்மா காந்தி பிறந்தநாள்: தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

Comments Off on மகாத்மா காந்தி பிறந்தநாள்: தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

சென்னை, அக் 2: மகாத்மா காந்தியின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், அவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி சென்னை மெரினா […]

Continue reading …

வன உயிரின வாரவிழா: கடற்கரையில் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

Comments Off on வன உயிரின வாரவிழா: கடற்கரையில் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

சென்னை, அக் 2: சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று (02.10.2021) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாராத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு.அசோக் உப்ரேதி ,இ.வ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். வன உயிரின வாரவிழவில், வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு. அசோக் உப்ரேதி அவர்கள் துவக்கி வைத்து கூறுகையில், “முதலமைச்சர் […]

Continue reading …

‘அண்ணாத்த’ படம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Comments Off on ‘அண்ணாத்த’ படம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

சென்னை, அக் 2: ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் முழுமையாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. படம் தீபாவளிக்கு வெளியானால் வியாபாரத்தில் பாதிப்பு உண்டாகும் […]

Continue reading …

காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

Comments Off on காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

புதுடெல்லி, அக் 2: மகாத்மா காந்தியின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர், காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேச பிதா மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியின் ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்தில், குடியரசு தலைவர் ராம் நாத் […]

Continue reading …

இந்தியாவில் புதிதாக 24,354 பேருக்கு கொரோனா!

Comments Off on இந்தியாவில் புதிதாக 24,354 பேருக்கு கொரோனா!

புதுடெல்லி, அக் 1: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 24,354 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 24,354 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,91,061 ஆக உயர்ந்துள்ளது. 25,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

Comments Off on ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

துபாய், அக் 2: ஐபிஎல் தொடரில்,  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில், பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45வது போட்டி நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேச […]

Continue reading …

நடிகர் திலகம் சிவாஜியின் 93வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு மரியாதை

Comments Off on நடிகர் திலகம் சிவாஜியின் 93வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு மரியாதை

சென்னை, அக் 1: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் doodle வெளியிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 1952ம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன், இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படமாகும். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன், […]

Continue reading …

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Comments Off on ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

சோபியன், அக் 1: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு – காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அப்பகுதியில், போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். பின், […]

Continue reading …