Home » Entries posted by Shankar U (Page 570)
Entries posted by Shankar

தர்மபுரி காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

Comments Off on தர்மபுரி காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

தர்மபுரி, செப் 30: தர்மபுரி சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல், அவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதனால், பொதுமக்கள் மத்தியில், அவருக்கு உள்ள செல்வாக்கும் மதிப்பும் உயர்ந்து வருவது நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில் தர்மபுரி […]

Continue reading …

ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

Comments Off on ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை, செப் 29: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த, 1991 -96 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் பதவியில் இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்துவதாக கூறி, இவரது கணவர் பாபு, அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரின் கணவர் பாபு மற்றும் சண்முகம் […]

Continue reading …

மீண்டும் ஏவுகணை சோதனை: வட கொரியாவால் பதற்றம்

Comments Off on மீண்டும் ஏவுகணை சோதனை: வட கொரியாவால் பதற்றம்

சியோல், செப் 29: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வட கொரியா நேற்று சோதித்ததால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து வந்தது. பின், 2018ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, வடகொரியாவின் நிலை […]

Continue reading …

2 பாகங்களில் வெளியாகும் கமல் படம்?

Comments Off on 2 பாகங்களில் வெளியாகும் கமல் படம்?

சென்னை, செப் 29: கமலின் விக்ரம் படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிட, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில், விஜயசேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படம் மிகப்பெரிய கதைக்களத்தில் உருவாகி வருவதால், ஒரே பாகமாக […]

Continue reading …

தமிழகத்தில் அக்டோபர் 10ம் தேதி நான்காம் கட்ட தடுப்பூசி முகாம்

Comments Off on தமிழகத்தில் அக்டோபர் 10ம் தேதி நான்காம் கட்ட தடுப்பூசி முகாம்

சென்னை, செப் 29: தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை நடந்துள்ள மூன்று கட்ட தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 70 லட்சம் பேருக்கு […]

Continue reading …

இந்தியாவில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on இந்தியாவில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, செப் 29: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 18,870 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 18,870 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,16,451 ஆக உயர்ந்துள்ளது. 28,178 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

துபாய், செப் 29: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 41வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் […]

Continue reading …

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி, செப் 29: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் சேர்ந்து மனு தாக்கல் செய்துள்ளனர். நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக, நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில், தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த, செப்டம்பர் 12ஆம் தேதி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். […]

Continue reading …

நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

Comments Off on நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

பஞ்சாப், செப் 29: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வராக இருந்த அமரீந்தருக்கும் இடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடித்துவந்த நிலையில், சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் அமரீந்தர். பின், மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். அவருடன், அமைச்சரவையிலும் பலர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், […]

Continue reading …

ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்!

Comments Off on ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்!

சென்னை, செப் 28: ‘திருவண்ணாமலை கோவிலின் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பிக்கலாம்’ என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, இந்து சமய […]

Continue reading …