Home » Entries posted by Shankar U (Page 593)
Entries posted by Shankar

ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

Comments Off on ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கை வெட்டப்படும் என்றும், ஆ.ராசா வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது என காட்டமாக கூறினார். காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ.ராசா என்று விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ராசாவும் கனிமொழியும் திகார் சிறையில் இருந்தார்கள் […]

Continue reading …

TOP 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோட்டு பெண் யார் அவர்?

Comments Off on TOP 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோட்டு பெண் யார் அவர்?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இது நம்பும்படியாக உள்ளதா? என கேட்கலாம். ஆம். இதை நம்பித்தான் ஆக வேண்டும். பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் சாதனை பெண்ணின் சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 870 கோடி ஆகும். அந்த சாதனை பெண்ணின் பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவி […]

Continue reading …

மீண்டும் அம்மா ஸ்கூட்டர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையர் பெறுவது எப்படி?

Comments Off on மீண்டும் அம்மா ஸ்கூட்டர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையர் பெறுவது எப்படி?

பணிக்கு செல்லும் பெண்களுக்கு அ.தி.மு.க அரசின் திட்டமான அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துஉள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க அரசு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் சட்ட மன்ற தேர்தலில் வென்ற அக்கட்சியின் முதல்வர் தனது முதல் கையெழுத்தை இத்திட்டத்திற்காக போட்டார். ஆட்சிக்கு வந்த சிறிது நாட்களிலேயே இத்திட்டத்தை செயல்படுத்தவும் […]

Continue reading …

2020 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டது என்ன பட்டியல் வெளியிட்டது கூகுள்!!

Comments Off on 2020 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டது என்ன பட்டியல் வெளியிட்டது கூகுள்!!

கூகிள் இந்தியா தனது வருடாந்திர ‘Year in Search’ முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அதற்கும் அப்பால் உள்ள அனைத்து தனித்துவமான தருணங்களையும் எடுத்துக்காட்டுகிறது. கூகிளில் மிகவும் பிரபலமான தேடல்கள் 2020 இன் மிகத் துல்லியமான ஸ்னாப்ஷாட்டை வழங்குகின்றன. கொடிய கோவிட் -19 நோய்த்தொற்று உலகெங்கிலும் ஒரு புதிய நிறுத்தத்திற்கு உயிரூட்டுவதால், இந்த ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட பாடங்களில் தொற்றுநோய் ஒன்றாகும் என்பதில் ஆச்சரியமில்லை. கூகிளின் வருடாந்திர அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த […]

Continue reading …

சீன உய்குர் முஸ்லிம்களுக்கு இந்த நிலைமையா

Comments Off on சீன உய்குர் முஸ்லிம்களுக்கு இந்த நிலைமையா

சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்துவதும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் உய்குர் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்தும், பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி […]

Continue reading …

சூரியனை விட 10 மடங்கு வெப்பமான சீனா உருவாக்கிய சூரியன்…

Comments Off on சூரியனை விட 10 மடங்கு வெப்பமான சீனா உருவாக்கிய சூரியன்…

சீனாவின் செங்குடு நகரில் செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக சீனா கையில் எடுத்த ‘செயற்கை சூரியன்’ என்று அழைக்கப்பட்ட ’அணுக்கரு இணைவு உலை’யை வெற்றிகரமாக ’சுவிட்ஸ் ஆன்’ செய்து அதை இயக்கியுள்ளது. இந்த செயற்கை சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் சூரியனை விடவும் 10 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள அணு உலைகளில் அணுக்கரு பிளவு வினை மூலம் தான் ஆற்றல் பெறப்படுகிறது. அணு உலைகளில், யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை நியூட்ரான் மூலம் […]

Continue reading …

ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை ஆ.ராசா எப்படி சொல்லலாம்…-வழக்கறிஞர் ஜோதி

Comments Off on ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை ஆ.ராசா எப்படி சொல்லலாம்…-வழக்கறிஞர் ஜோதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசமைப்புச் சட்டத்தை மீறிய மிகப்பெரிய கொள்ளைக்காரி என உச்சநீதிமன்றம் சொன்னதாக ஆ.ராசா கூறுவது பொய் என்று மூத்த வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜோதி, முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 12 வழக்குகளில் வாதாடி 11 வழக்குகளில் வெற்றிபெற்றுத் தந்ததாகக் கூறினார். ஆனால், 12ஆவது வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பாதியிலேயே சசிகலா தம்மை விரட்டி விட்டதாகவும், டிடிவி தினகரன் தனது உயிருக்கு உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி மிரட்டியதாகவும் […]

Continue reading …

என்னது நான் சங்கியா…? கமல் ஆவேசம்

Comments Off on என்னது நான் சங்கியா…? கமல் ஆவேசம்

அறத்தின் பக்கம் நிற்கும் தன்னை பார்த்து சங்கி, பி டீம் என்று விமர்சிப்பவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக சமூகவளைதளங்களில் அதிமுகவினரும், திமுகவினரும் கமலஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், […]

Continue reading …

பிரஷாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் அரசியல் திட்டம்…

Comments Off on பிரஷாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் அரசியல் திட்டம்…

பிரசாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் பக்கா திட்டம் எங்க. அடிக்கணுமோ சரியா அங்க அடித்திருக்கிறார். ரஜினி கட்சி தொடங்குவார், தொடங்கமாட்டார் என பல்வேறு விவாதங்கள் பொது தளங்களில் தொடர்ந்து விவாத பொருளாக இருந்து வந்தது ரஜினி கட்சி தொடங்கவே மாட்டார் என ஒரு தரப்பும், ரஜினி கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். இந்நிலையில் ரஜினி தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், […]

Continue reading …

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியஅறிவிப்பு டிசம்பர் 20 கடைசி தேதி!!!

Comments Off on ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியஅறிவிப்பு டிசம்பர் 20 கடைசி தேதி!!!

சர்க்கரை ரேஷன் அட்டைகளை, அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்ற வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பொது விநியோக திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இதில் பெரும்பாலானோர் தங்கள் குடும்ப அட்டைகளை, அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அதனை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். […]

Continue reading …