சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 10 கூடுதல் நீதிபதிகளை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். நீதிபதிகள் திரு கோவிந்தராஜூலு சந்திரசேகரன், திரு ஏ.ஏ.நக்கீரன், திரு வீராசாமி சிவஞானம், திரு கணேசன் இளங்கோவன், திருமதி ஆனந்தி சுப்ரமணியன், திருமதி கண்ணம்மாள் சண்முகசுந்தரம், திரு சத்தி குமார் சுகுமாரா குருப், திரு முரளி சங்கர் குப்புராஜூ, திருமிகு மஞ்சுளா ராமராஜூ நல்லையா மற்றும் திருமதி தமிழ்செல்வி டி.வலயபாளையம் ஆகியோரை மூப்பு வரிசை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக […]
Continue reading …நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
Continue reading …முதல்வர் பழனிசாமி டுவிட்: முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்ட வாழ்த்து செய்தியில், கிரிக்கெட் போட்டியில் இந்திய […]
Continue reading …இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இன்று 23 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309-வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ரன்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார். அதை கோலி இன்று முறியடித்துள்ளார். 12,000 ரன்களைக் கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251-வது ஒருநாள் […]
Continue reading …ஆறுகளை மாசு படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தத்தை கொண்டுவரக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியை எழுப்பியது. கரூர் ,திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை நிறுவனங்கள் தங்களது நிறுவனங்கள் மூலம் வரும் கழிவுகளை ஆற்றுக்குள் கலப்பதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் மாவட்டத்தில் எத்தனை பட்டறைகள், ஆலைகள், தொழிலகங்கள் உள்ளன..எத்தனை நிறுவனங்களின் கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது என்றும் கழிவு நீரை […]
Continue reading …வருகின்ற டிசம்பர் 3ல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள் சசிகலாவும், இளவரசியும் அவர்கள் வெளியே வருவதற்கான அணைத்து முயற்சிகளையும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் செய்து வருகின்றனர். சிறையை விட்டு வெளியே வந்ததும் சென்னை செல்லும் சசிகலா அங்கே முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்திக்க இருக்கிறார். அவர்களுடன் சில ஆலோசனைகள் செய்கிறார். பின்னர் டிசம்பர் ஐந்தாம் தேதி அம்மா சமாதிக்கு செல்லும் சசிகலா, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் பண்ணிய மாதிரி […]
Continue reading …சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கத்தை, சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னை வரும் இன்டிகோ விமானத்தில் பெண் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த உமாகொலுசு பீவி, மகாரிபா பீவி, மதுரையைச் சேர்ந்த குணசுந்தரி ஆகிய பெண் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. பசை வடிவிலான தங்கம் 11 பாக்கெட்டுகளை இவர்கள் தங்கள் உடையில் மறைத்து வைத்திருந்தனர். அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் 604 கிராம் அளவுக்கு சுத்த தங்கம் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.31.41 லட்சம். மகாரிபா பீவி என்பவர் மீது ஏற்கனவே, கடத்தல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்பட்டார். விமானத்திலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பயணி இருக்கை ஒன்றின் கீழ், துணிப் பை ஒன்று மீட்கப்பட்டது. அதில் 802 கிராம் எடையில் 5 தங்க துண்டுகள் டேப் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.41.71 லட்சம். இந்தப் பையை யாரும் உரிமை கோரவில்லை. மொத்தம் 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.73.12 லட்சம் என சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Continue reading …‘‘நிவர்’புயல் சென்னை அருகே கடக்கவுள்ளதால், சென்னை துறைமுகத்துக்கு 6ம் எண் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை துறைமுகத்தில் இருந்த 4 சரக்கு கப்பல்கள், ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டன. கப்பல்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலோர காவல் படை, கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பல்கள் துறைமுகத்தில் உள்ள ஜவகர் படகுத்துறையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. புயல் தீவிரத்தின் அடிப்படையில், துறைமுகங்களில் உள்ள கிரேன்களை மற்றும் இதர சாதனங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரேன்கள் எல்லாம் துறைமுகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கன்டெய்னர் லாரிகளை 18.00 மணிக்கு மேல் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு வெளியே நிற்கும் வாகனங்கள் உள்ளே வந்தவுடன், துறைமுகத்தின் கதவு மூடப்படும் என சென்னை துறைமுக கழகத்தின் தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Continue reading …அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளாத தகவல் மேலும் புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என்று தகவல்.மணிக்கு 5 கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருவதாகவும் தலவல். நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வரை காற்றின் வேகம் […]
Continue reading …கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சு வார்தையில் வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக சில முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வரும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன், தனுஷின் ஜகமே தந்திரம், சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட […]
Continue reading …