சென்னை,மே 9 தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2.5.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் […]
Continue reading …சென்னை,மே 8 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய post production பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார் […]
Continue reading …தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்
Continue reading …புதுச்சேரி,மே 6 கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ மருந்தில்லாத சூழலில் சுய தற்காப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் கிருமி தொற்றாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதும் தான் இப்போது நாம் செய்யக்கூடியவையாக உள்ளன. கொரோனா வைரஸ் கிருமியானது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களிடம் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றது. அதனால் தான் முதியவர்கள், ஏற்கனவே நோய் இருப்பவர்கள், குழந்தைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் உள்ள நோய் […]
Continue reading …சென்னை,மே 6 இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த, 33,627 கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 1000 உதவித் தொகை வழங்குவதற்காக ரூபாய் 3,36,27,000/- (மூன்று கோடியே முப்பத்தாறு இலட்சத்து இருபத்திஏழாயிரம் மட்டும்) அரசால் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பூசாரிகளின் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்றளித்தல் ஆகிய பணிகளை கிராம நிருவாக அலுவலர்கள் மூலமாக மேற்கொண்டு விவரங்களை […]
Continue reading …சென்னை,மே 6 ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப் பணித்துறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ளஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க முதலமைச்சர் அவர்களால் ‘குடிமராமத்து திட்டம்’ 2017-ல் தொடங்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை […]
Continue reading …சென்னை,மே 4 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் இப்போது வரையிலான 40 நாட்களாக அவர்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர். […]
Continue reading …சென்னை,மே 3 “ஊரடங்கு தளர்வுகளில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் கொரானாவை எதிர் கொண்டு அதனை வீழ்த்திட மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சுமார் 40நாட்களை கடந்து போன சூழலில் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் மேலும் இரு […]
Continue reading …சென்னை, மே 2 மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களிடமிருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும் என்பது உலக வரலாற்றில் அறமற்ற முறையில் அத்துமீற நினைக்கும் அதிகார வர்க்கத்தின் முதல் செயல் திட்டம் ஆகும். ஏற்கனவே நாங்கள் நீட் என்கிற எமனுக்கு பத்துக்கும் மேற்பட்ட அறிவும் செறிவும் நிறைந்த எங்கள் […]
Continue reading …சென்னை, மே 2 இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் […]
Continue reading …