
“குரங்கு பொம்மை” படத்தை விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் இயக்கியவர் நித்திலன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். இப்போது அவர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான “மகாராஜா” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் […]
Continue reading …
தமிழக அரசு சென்னையில் மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைய இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு சென்னையில் மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது, இந்த அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை வழங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கையெழுத்து பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் […]
Continue reading …
தமிழகம் முழுதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தார். தற்போது அவர் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. முதல் கட்டமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இத்தகவலை திமுக மறுத்துள்ளது. இதனை அடுத்து தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அவர் ஏப்ரல் 29ம் தேதி கொடைக்கானல் சென்று மே 4ம் தேதி வரை அங்கு ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி […]
Continue reading …
ஊராட்சி செயலாளர் காளிமுத்து, தொட்டி பராமரிப்பாளர் ரங்கசாமி ஆகியோர் மீது புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது கடந்த 2013-2014ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த […]
Continue reading …
கதாநாயகனாக நடிகர் சந்தானம் முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த “டிடி ரிட்டர்ன்ஸ்” மற்றும் “வடக்குப்பட்டி ராமசாமி” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அப்படி சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் “இங்க நாங்கதன் கிங்கு” என்ற படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரித்து வருகிறார். இப்படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கயுள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை உரிமையை […]
Continue reading …
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியிலும் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி குறைவாக மத்திய அரசு ஒதுக்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு […]
Continue reading …
யுவன் சங்கர் ராஜா இசையில் கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவான “ஸ்டார்” திரைப்படம் மே 10ம் தேதி ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடுத்துர குடும்பத்தைச் சேர்ந்த கவின் தனது அம்மா படித்து முன்னேற வேண்டும் என்று கூற தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருப்பதாக கூறுகிறார். இதனால் அவரது அம்மா கவலைப்பட தனது லட்சியத்தை நோக்கி கவின் பயணம் செய்யும்போது சந்திக்கும் பிரச்சனைகள், இன்னல்கள், அவமானங்கள், […]
Continue reading …
திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீம நகர் அருகிலுள்ள யாதவ தெருவில் ஆம்புலன்ஸ் வசதி அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் மாநில தலைவர் பீம நகர் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வழக்கறிஞர்கள் முஸ்ஃபிரா, ஆனந்தகுமார், 52-வது வார்டு […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் மே மாதம் முதல் வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே வாரத்தில் தமிழகம் முழுதும் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் அதிகமான வெப்பம் பதிவாகி உள்ளது. மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்றும் 28 நாட்களுக்கு வெயில் உச்சக்கட்டத்தில் இருக்கும் […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி வழக்கு தொடர்பாக சமீபத்தில் ஐந்து மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக நீர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்னீமன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை திரட்டி இருப்பதாகவும், விரைவில் சம்மன் கொடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, நேற்று முன் […]
Continue reading …