Home » Entries posted by Shankar U (Page 75)
Entries posted by Shankar

மம்மூட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on மம்மூட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. பிப்ரவரி மாதம் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரித்த “பிரமயுகம்” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமான படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது மம்மூட்டி மீண்டும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் […]

Continue reading …

குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸில் புகுந்த பாம்பு!

Comments Off on குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸில் புகுந்த பாம்பு!

பாம்பு ஒன்று குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென நுழைந்து பயணியை கடித்து விட்டது. அந்த பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையிலிருந்து குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று காலை கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆறாவது பெட்டியில் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் பயணம் செய்து கொண்டிருந்தார். எர்ணாகுளம் நிலையத்தை நெருங்கிய போது திடீரென ஒரு பாம்பு அவரை கடித்துவிட்டதாக தெரிகிறது. […]

Continue reading …

ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அன்புமணி!

Comments Off on ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அன்புமணி!

அன்புமணி ராமதாஸ், வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் பணம் கொடுப்பதாகவும் அதனை தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனைகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து ஆட்சியரை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர், “அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படது குறித்து வீடியோ ஆதாரத்துடன் […]

Continue reading …

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Comments Off on நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் ஒருவேளை மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. வேட்பு […]

Continue reading …

சல்மான் கானை கொல்லத் துடிக்கும் நபர் யார்?

Comments Off on சல்மான் கானை கொல்லத் துடிக்கும் நபர் யார்?

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அதிர்ச்சிக்குரிய பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சில தினங்களுக்கு முன் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு அதிகாலையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம் என டில்லி சிறையில் உள்ள கூலிப்படை தலைவன் அன்மோல் […]

Continue reading …

ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

Comments Off on ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்திய ரயில்வே துறையில் ரயில்வே பாதுகாப்பு படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10வது அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு […]

Continue reading …

கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

Comments Off on கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் நான்கு கட்சிகளுமே மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரமும் […]

Continue reading …

தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

Comments Off on தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

ரூ.1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி அன்று நாடு முழுதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் […]

Continue reading …

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

Comments Off on இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

இன்று சென்னையில் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி அதன் பிறகு விவாகரத்து பெற்றார். தற்போது மீண்டும் அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஷங்கர் திருமண […]

Continue reading …

தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “வாக்குப்பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]

Continue reading …