கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடல் பகுதிக்கு மருத்துவ மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர் 12 பேர் சுற்றுலா வந்த நிலையில், 7 பேர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர் 2 பெண்கள் உள்பட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், 5 மாணவர்கள் சடலமாக மீட்பு
Continue reading …
பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்கை. தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் தலைவர் (பொறுப்பு)சிவா ஆண்டவர் செல்வகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் குறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் குறிப்பிட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், செய்திகளையும் வெளியிட்டு வரும் நபர்கள் மீதும்,அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்கள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்கும்படி சங்கத்தின் சார்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் […]
Continue reading …
அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோயிலுக்கு வந்தார். கோவையில் அடுத்த மாதம் நடைபெறும் அவரது பேரன் திருமண அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
Continue reading …
கள்ளகாதலியை தேடி தேனி மாவட்டம் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறையினுள் நுழைய முயன்ற இளைஞர் கைது…! தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் செலுத்திய வாக்கு பெட்டிகள் அனைத்தும் தேனி அரண்மனை புதூர் அருகே உள்ள கம்மவர் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.வாக்குகள் எண்ணுவதற்கு இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில் இன்று சுமார் 10:30 மணி அளவில் .22 வயது மதிக்கத்தக்க செல்வம் மகன் […]
Continue reading …
திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து : சென்னையைச் சேர்ந்த 2 பேர் சாவு, இருவர் காயம். சென்னை திருவள்ளூர், அம்பத்தூர் குமரன் தெருவை சேர்ந்த கணேஷ் பாபு அம்பத்தூர் விஜயலெட்சுமிபுரத்தை சேர்ந்த ரவி, சென்னை குறுக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன், சென்னை கம்பன் நகர் முதல் தெருவை சேர்ந்த மதன்குமார், ஆகிய 4 பேரும் ஒரு காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டனர். வியாழக் கிழமை பகலில் கார் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமாநகர் […]
Continue reading …
விராலிமலையில் 30-ம் தேதி ஜல்லிக்கட்டு. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதழ் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி பூச்சொரிதழ் விழா மட்டும் நடைபெற்றது. […]
Continue reading …
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பாலுபாரதி. இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கும் D.கூடலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த பெண் 2 குழந்தைகளுடன் பாலுபாரதியின் தோட்டத்தில் வீட்டில் வசித்து வருகிறார். இந்த […]
Continue reading …
பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல். விருதுநகர் – திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக தலைமை ஒதுங்கியிருந்த 40 லட்சம் ரூபாயை கொடுக்காமல், பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றி விட்டதாக, குற்றம் சாட்டி திருமங்கலம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Continue reading …
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நிர்மலா தேவி ஆஜராகாத நிலையில் வழக்கின் தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி.
Continue reading …
நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை. வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல்காந்தி, அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.
Continue reading …