Home » Entries posted by Ramesh M (Page 11)
Entries posted by Vaalmihi

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலை அருகே காருக்குள் கிடந்த 3 பேரின் சடலம்

Comments Off on தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலை அருகே காருக்குள் கிடந்த 3 பேரின் சடலம்

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலை அருகே காருக்குள் கிடந்த 3 பேரின் சடலம். கம்பம் மெட்டு சாலையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற கார் காருக்குள் பெண் உட்பட 3 பேர் சடலமாக கிடந்தனர் – போலீசார் விசாரணை விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் காருக்கு அருகே பூச்சி மருந்து பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு.

Continue reading …

பம்பையில் பார்க்கிங் …! அதிரடி உத்தரவிட்ட கேரளா உயர் நீதி மன்றம்.

Comments Off on பம்பையில் பார்க்கிங் …! அதிரடி உத்தரவிட்ட கேரளா உயர் நீதி மன்றம்.

பம்பையில் பார்க்கிங் …! அதிரடி உத்தரவிட்ட கேரளா உயர் நீதி மன்றம். சபரிமலை பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் கனரக வாகனங்கள் நிலக்கல்லில்தான் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் வந்து ஊர் திரும்ப வேண்டும். இதற்கு பக்தர்கள் பம்பையில் பார்க்கிங் வசதி வேண்டும் என கோரிக்கை […]

Continue reading …

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

Comments Off on குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து.. தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சூழல் தவிர்க்கப்பட்டு, சிறிய அளவிலான விபத்தாக முடிந்தது. சிறு காயங்களுடன் பயணிகளும், ஓட்டுநரும் தப்பினர். […]

Continue reading …

ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

Comments Off on ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் தீப்பிடித்ததால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் டயரில் பற்றிய தீயை அணைத்த பின்னர், மதுரை பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்லும் வேறு அரசு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Continue reading …

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

Comments Off on திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம். பெங்களூரு கெம்பேகவுடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.செ.ஆசைதம்பி அவர்கள் இன்று 12-05-2024 அதிகாலை 5:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

Continue reading …

தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம்.

Comments Off on தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம்.

தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம். தேனி அருகே வீரபாண்டியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ஆண்டு தோறும் நடைபெறும் கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட […]

Continue reading …

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம்

Comments Off on கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம். தஞ்சையில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் காரின் டயர் வெடித்து பயங்கர விபத்து காரில் பயணித்த பெண், சிறுமி உள்ளிட்ட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் காயம் அடைந்த மேலும் 5 பேருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Continue reading …

அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம்.

Comments Off on அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம்.

அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு. விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

Continue reading …

திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு.

Comments Off on திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு.

திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஷர்மிளா இவருடைய மதுரை பாசிங்காபுரம், மீனாட்சிநகரில் உள்ள வீட்டில் 250 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் திருடிய மர்ம நபர்களை அலங்காநல்லூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Continue reading …

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Comments Off on 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்ப 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசியமான பொருள்களை தரமான எடையாகவும் பொட்டலமாகவும், வழங்கிட வேண்டும் என்றும் , சரியான எடையில் அத்தியாவசியமான பொருட்களை இறக்காமல் அபராதம் […]

Continue reading …