கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு , கருப்புக் கொடி கட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் 2 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் இப்பகுதியில் புதியதாக கல்குவாரி அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு […]
Continue reading …53 உடல்களை தானமாக பெற்று மதுரை அரசு மருத்துவமனை சாதனை. மதுரை அரசு மருத்துவமனையில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரை 53 உடல்கள் தானமாக பெறப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நிலைய அலுவலர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘உடல் தானம் செய்தவர்கள், ஆதரவற்ற நிலையில் இறப்போர் என்று கடந்த ஆண்டில் 53 உடல்கள் பெறப்பட்டன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு படிப்புக்காக 20 உடல்கள் ஆண்டுதோறும் தேவைப்படும். மற்றவற்றை புதிய கல்லுாரிகளுக்கு அனுப்பி விடுகிறோம்” […]
Continue reading …கோயில் யானையை காணோம், ஆட்சியரிடம் மனு. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள புனுகு கருப்பணசாமி கோயிலுக்கு சொந்தமான “ரெடி லெட்சுமி ” என்னும் யானையை, தனிநபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு விற்று விட்டதாக கூறி, நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (2.7) மனு அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
Continue reading …*தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்* உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் ககன் தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் இருந்து ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமனம் நீர்வளத் துறை செயலாளராக மணி வாசன் நியமனம். சுற்றுலாத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம். பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் நெடுஞ்சாலை துறை செயலாளராக செல்வராஜ் நியமனம்*
Continue reading …மேலூர் மேலவளவு தியாகிகளின் 27ம் ஆண்டு நினைவு நாள், தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநில குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே பொன்னுத்தாய், மேலூர் தாலுகா செயலாளர் எம். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Continue reading …இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் ஆங்கில புத்தக வெளியீடு. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்பு. இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை மத்திய அமைச்சர், எம்.பிக்கள் பங்கேற்று வெளியீட்டனர். திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வந்தார். இந்த புத்தகத்தின் […]
Continue reading …பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா. மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி ஜூன் மாதம் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஓய்வு பெறும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையை பாராட்டி, மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் அவர்கள், அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
Continue reading …கர்நாடகா சாலை விபத்தில் 13 பேர் பலி! கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பியபோது சோகம்! வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை
Continue reading …*எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவு; 7 தனிப்படைகள் அமைப்பு* நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க முன்பு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்போது கூடிதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Continue reading …தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார் விஜய்! போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் அரங்கிற்கு முன்பாகவே சென்றுள்ளார். சென்னை திருவான்மையூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Continue reading …