மதுரை மக்களவைத் தேர்தலில் 328 வாக்குச்சாவடிகளில் பாஜக முதலிடம். மதுரை லோக்சபா தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே. பி. ராமலிங்கம், ” மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக 2வது இடம் பெற்றுள்ளது. எதிர்பாராத வகையில் 328 ஓட்டுச் சாவடிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை அதிமுக, கோட்டை என்பதை தாண்டி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என கட்சி எடுத்த முடிவுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று கூறினார்.
Continue reading …செங்குண்டு அய்யனார் திருவிழா. சுடு பானையில் கறிவிருந்து சமைத்து பரிமாறல். மேலுார், : அரிட்டாபட்டியில் செங்குண்டு அய்யனார் ஆனிமாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் பக்தர்கள் புரவிகளை வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். நேற்று அரிட்டாபட்டியில் உள்ள மழட்டழகி தர்மம் என்னும் குளத்தில் பெண்கள் புதிய மண்பானையில் தீர்த்தம் எடுத்து வந்து வெள்ளச்சிஆயி அம்மன் கோயில் முன்பு 300க்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு […]
Continue reading …முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் டேம். திண்டுக்கல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால், திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கம் , அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை அடுத்து மறுகால் ஓடி உபரி நீர் குடகனாற்றில் வரத் தொடங்கியுள்ளது.
Continue reading …திண்டுக்கல்லில் டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர் கைது. திண்டுக்கல்லில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில், திண்டுக்கல் நந்தவனப்பட்டி, விஜய் நகர் அருகே டூ வீலரில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லோகநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 400 கிலோ, ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Continue reading …காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில், இன்று (26.6) காலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், மாவட்டம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஹென்றி திபேன் சிறப்புரையாற்றினார்.
Continue reading …*முன்னாள் அதிமுக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் விடுதலை* *கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கு பாலியல் புகார் குறித்து நடந்து வந்த போஸ்கோ வழக்கில் இன்று விடுதலை என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.*
Continue reading …ஓசி டிக்கெட் என நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து. சிறை பிடித்த மக்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் ஓசி டிக்கெட் என்று நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
Continue reading …குவைத் மங்காப் பகுதியில் நேற்று அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 42 பேர் இந்தியர்கள் ( கேரளா 25 பேர்) மற்றவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. குவைத்தின் மங்காப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. அஹ்மதி மற்றும் முபாரக் அல் கபீர் கவர்னரேட்டுகளில் உள்ள அரசு வழக்குத் துறையின் […]
Continue reading …கார்கில் 25ம் ஆண்டு வெற்றி தினம், ராணுவ வீரர்கள் அணிவகுப்பு. கார்கில் போரின் 25ம் ஆண்டு, வெற்றி தினத்தையொட்டி, தனுஷ்கோடியிலிருந்து, இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாக, புறப்பட்டு புதன்கிழமை மதுரை வந்து சேர்ந்த ராணுவ வீரா்களை, மாநகரக் காவல் ஆணையர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது கார்கில் போர் வெற்றி குறித்தும், இதில் ராணுவ வீரா்களின் உயிர்த் தியாகம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Continue reading …அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா. மதுரை, சோழவந்தான் அருகே எஸ். அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. அர்ச்சகா்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து, புனித நீர் கலசங்கள் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மந்தையம்மன் உள்பட பரிகார தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Continue reading …