*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.* *கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்* *நடிகர் அஜித் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.* *நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இன்று நலமுடன் வீடு திரும்பினார் அஜித்.* *அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் மேலாளர் சுரேஷந்திரா அறிவிப்பு.*
Continue reading …தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. தேனி மாவட்டம் அல்லிநகரம் பட்டி வீரப்ப அய்யனார் கோவில் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று நபர் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். விபத்து குறித்து போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Continue reading …திருப்பூர் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு கொலை முயற்சி வழக்கில் போலீஸ்காரர் கைது. பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மீது ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில், பல்லடம் சிறப்பு பிரிவு காவலர் சுபின் நேற்றிரவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Continue reading …திருவானைக்காவல் அடிமனை பிரச்சனை: பத்திர பதிவினை தடை செய்வதை இரத்து செய்யக்கோரிஇந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம். பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு. திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவானைக்கோவில் பர்மாகாலனியை சேர்ந்த மாரி(எ)பத்மநாபன் திருவானைக்கோவில்ஜெம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோவில் செயல் அலுவலர்/உதவி ஆணையர் கடிதத்தின் படி ஶ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சில புலஎண்கள் மீது பத்திர பதிவு மோற்கெள்ள வேண்டாம் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இதனால் திருவானைக்காயில் பகுதியில் உள்ள சுமார் 4000ஆயிரத்திற்கு மேல் வாழும் பொதுமக்களின் […]
Continue reading …மகளிர் தின விழாவையொட்டி புத்தூர் விழியிழந்தோர் பள்ளியில் மாணவிகளுக்கு உதவிகள். பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது. பெண்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 – ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும். 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் […]
Continue reading …திருச்சி விமாநிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை. திருச்சி மார்ச் 8- திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இலங்கை ,சார்ஜா,மலேசியா சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவ்வப்போதுவிமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கத்தை கடத்தி வரும் […]
Continue reading …விபத்தில் மூளை சாவு அடைந்ததவர். இறந்தும் வாழ்வளிக்கும் மனிதநேய கொடைவள்ளல் இறுதி யாத்திரை…. ராயல் சல்யூட் அடித்து பிரியாவிடை கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள். தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த உடல் உறுப்பு தான திட்டம் கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. உலகிலேயே உடல் […]
Continue reading …சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நிகழ்வு. மொத்தம் 110 கி.மீ தூரம் கொண்ட இந்த பயணத்திற்காக கோயில்களில் பக்தர்கள் திரண்டுள்ளனர். மாவட்டத்தில் ஆட்டோ, கார், வேன் ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Continue reading …ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஏழை எளிய குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையிலுள்ள சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும், பொதுக்கல்வி முறையை பாதுகாக்கவும், சமகாலக் கல்வி முறையிலுள்ள குறைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும், தனது முகநூலில் கருத்துக்களையும் கட்டுரைகளையும் எழுதியதால், செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியையும், சிறந்த கல்விச் செயற்பாட்டாளருமான உமா மகேஸ்வரி அவர்களை, தமிழக அரசு பணியிடை […]
Continue reading …திருச்சியில் 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் சிவ வழிபாட்டு குழுவினரால் மீட்டெடுப்பு. திருச்சி, திருவெறும்பூர் கும்பக்குடி கிராமத்தில், 10 ஆம் நூற்றாண்டு சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, கும்பக்குடியில், சிவாலயம் சிதைந்த நிலையில், புதர் மண்டிக் கிடந்தது. கிராம மக்களுடன் சேர்ந்து, சிவ வழிபாட்டுக் குழுவினர் இடிபாடுகளை ஒழுங்குபடுத்தி, சிவாலயத்தை மீட்டுள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள மத்திய அரசின் (எச்.ஏ.பி.பி) எச் இபிஎப் தொழிற்சாலையில் பணிபுரியும் […]
Continue reading …