ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் உடல்நிலை குறைவால் என்று காலமானார்.
பல்பீர் சிங் 95 வயது ஆகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மெகாலியில் உள்ள குறைவால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக மே 18ஆம் தேதி முதல் அரை கோமாவில் இருந்து வந்துள்ளார். இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கங்களை வென்றதற்கு முக்கிய காரணமானவர் பல்பீர் சிங். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் இறுதி போட்டியில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வென்றது. அந்த போட்டியில் பல்பீர் சிங் ஐந்து கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
மேலும் 1957ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2015ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் வாழ்நாள் சாதனை விருது பல்பீர் சிங்க்கு வழங்கப்பட்டுள்ளது.