மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கூட தெரியவில்லை. இந்த செய்தி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு என்ன காரணம் என கேள்வி கிளம்பி வந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி ராஜினாமா செய்த கிறிஸ்டெல்லா என்ற செவிலியர் ஒரு குற்றசாட்டை கூறியுள்ளார். அதில் பணிபுரிந்த இடத்தில் இனவெறி, வேற்றுமை போன்ற தடைகள் வந்தது. மேலும், மக்கள் எண்களின் மீது எச்சில் துப்பினார், மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறை எற்பட்டது என கூறியுள்ளார்.