பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்.

Filed under: தமிழகம் |

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
வேலை வாய்ப்பு முகாம்.

சுமார் 400 பேருக்கு பணியாணைகள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், சுமார் 400 பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், நான் முதல்வன் திட்டத்தின்
கீழ் மாநில அளவிலான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேலை வாய்ப்பு முகாமை திருச்சி, காஜாமலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

பல்கலைக்கழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ந.பிரசன்னா வரவேற்றார். வேலைவாய்ப்பு முகாம் அமைப்பாளர் சி.பிரேமானந்த், நான் முதல்வன் திட்ட பிரதிநிதிகள் பிங்கி ஜெனார்தன்,மாவட்ட திட்ட மேலாளர் பி. ஓம் பிரகாஷ், பல்வேறு கல்லூரிகளின் வேலை வாய்ப்பு அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனங்கள் சுமார் 25 க்கும் மேற்பட்டவற்றிலிருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளை சேர்ந்த 1584 மாணவர்கள் பங்கேற்றதில் சுமார் 400}க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.