இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Filed under: உலகம் |

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹப்னாபுஜோரூரில் உள்ள ஒரு இல்லத்தில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடி குண்டு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை கிடைத்ததும் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் அந்த வெடிகுண்டை கைப்பற்றினர். பின்பு அந்த வெடிகுண்டை பரிசோதனை செய்ததில் தற்போது அது வெடிக்கும் நிலையில் உள்ளன என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து அந்த குண்டை பாதுகாப்பான இடத்திற்கு சென்று அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பகுதியில் வேறு எந்த இடத்திலாவது இந்த குண்டுகள் உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.