பாஜக தரப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கவர்னர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை நேற்றுக் கொண்டாடினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் பலதரப்பிலிருந்தும் எழுந்தன. எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் […]
Continue reading …கல்வித்துறை அமைச்சர் கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமித்தது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். மணிகண்ட பூபதி தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒருவர் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது கட்சியை சேர்ந்தவர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவரது பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என […]
Continue reading …ஓபிஎஸ் அதிமுக நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வருமாறு ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகராமாகி ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது. அதை தொடர்ந்து ஜூலை 11ல் மீண்டும் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் […]
Continue reading …பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் கட்டாயம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென பலதரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுவை திமுக அரசு ஏற்படுத்தியது. இந்த குழு வல்லுனர்களிடம் பரிந்துரை பெறுதல், மக்கள் கருத்துகளை கேட்டறிதல் ஆகியவற்றை மேற்கொண்டு இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக […]
Continue reading …பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாங்கள் திமுகவோடு சமரசம் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் செய்துகொள்ளாது. எங்களுக்குள் மத்திய, மாநில அரசு இடையிலான உறவு மட்டுமே உள்ளது. கைகட்டி வாய் பொத்தி நிற்க நான் ஆளில்லை. நான் கலைஞரின் பிள்ளை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “திமுக தரப்பில் பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்களும் அவர்களோடு சமரசம் […]
Continue reading …அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ அதிமுகவில் இனி ஒற்றைத் தலைமையே. அந்த கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என பேட்டியளித்துள்ளார். சென்னை ஐகோர்ட் நேற்று அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் எதுவும் செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவில் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களையும் இணைத்துக் கொள்வோம் என்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, […]
Continue reading …சென்னை உயர்நீதிமன்றம் அதிமக பொதுக்குழு கூட்டம் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது, அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதும் செல்லாது என்று வெளியிட்ட தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். மேலும் தர்மம் வென்றது… நீதி வென்றது இனிமேல் எல்லாமே எங்களுக்கு தான் வெற்றி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் […]
Continue reading …பதவியிலிருந்து விலகும்படி தமிழக கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷை பற்றி சமூக வலைதளங்களில்#Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. திமுக ஆட்சியமைத்த போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வியில் அன்பில் மகேஷ் மேற்கொள்ளும் மாற்றங்கள் விமர்சனத்திற்கு உள்ளாவதும் பின்னர் திரும்ப பெறப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. முன்னதாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மூலமாக செயல்படுத்த எடுக்கப்பட்ட முடிவு கண்டனத்திற்கு உள்ளானதால் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக […]
Continue reading …மத்திய அரசு விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே ஒதுக்கியுள்ளது. கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8ம் தேதி போட்டிகள் நிறைவடைந்தது. போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. வெற்றிகள் தமிழகம் தருகின்ற போதிலும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் […]
Continue reading …2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா பேட்டியளித்துள்ளார். அதிமுக கட்சியில் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை பிரச்னையில் இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டது.இந்த போட்டியின் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர். வரும் காலத்தில் ஓ […]
Continue reading …