மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில செயலாளரான சரத்பாபு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் 4 ஆண்டுகளுக்கும் மேலானது. கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள். தற்போது கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் […]
Continue reading …பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இனிமேல் திமுகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது: என கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களைத்தான் திமுக அறிவிக்கிறது. அப்படி அறிவித்த திட்டங்களில் மேல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அவ்வகையில் இன்று நடிகையும், பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் “இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் […]
Continue reading …நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக போவதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரகாஷ் ராஜை ராஜ்ய சபா எம்பியாக்க போவதாக கூறப்படுகிறது.
Continue reading …நான்கு புதிய அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே முன்னிலையில் பதவிபிரமாணத்துடன் நடைபெற்றது. மக்கள் போராட்டம் காரணமாக மஹிந்த ராஜபக்சே மே 9ம் தேதி பதவி விலகியபின், ரணில் விக்ரமசிங்க மே 12ம் தேதி இலங்கை பிரதமராகப் பதவியேற்றார். அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் நான்கு பேர் இன்று இணைந்தனர். இந்த பதவி பிரமாண நிகழ்வு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (14) முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் […]
Continue reading …கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை […]
Continue reading …உயர் கல்வி அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என்று அறிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம். எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். சர்வதேச மொழியான […]
Continue reading …காங்கிரஸ் கட்சி மேலிடம் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது மட்டுமல்லாது அக்கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதுமாக அறிவித்திருக்கிறார். திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் […]
Continue reading …பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகிவிடும் என எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் பேசம்போது, “தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குரும்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்றவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறந்த வெங்கடேஷையும் சேர்த்து தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. எந்த சமூகக் கேடுகளையும் விட […]
Continue reading …இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கையில் 5 முறை பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். இலங்கையில் நிலவிவரும் தொடர் பொருளாதார நெருக்கடியால் நிலைமை கைமீறியுள்ளது. இலங்கை முன்னாள் பிரதார் ராஜபக்சேவின் வீட்டை கொளுத்திய சிங்களர்கள், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களை அடித்தனர். இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே […]
Continue reading …இலங்கையின் முன்னார் அமைச்சரான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் பல இடங்களில் கலவரம் மூண்டுள்ளது. இதில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவமும் களத்தில் உள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், […]
Continue reading …