பிரகாஷ் ராஜ் எம்.பி. ஆகிறாரா?

Filed under: அரசியல் |

நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக போவதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரகாஷ் ராஜை ராஜ்ய சபா எம்பியாக்க போவதாக கூறப்படுகிறது.