Home » Archives by category » அரசியல் (Page 197)

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்!

Comments Off on திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்! திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் தம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் இப்போது அவருக்கும் […]

Continue reading …

இந்தியாவில் 2 லட்சம் பேர் பாதிப்பு! பீதியூட்டும் கொரோனா !

Comments Off on இந்தியாவில் 2 லட்சம் பேர் பாதிப்பு! பீதியூட்டும் கொரோனா !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி 5000 முதல் 8000 வரை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் முழுதாக பலனளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு இன்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,05,045 ஆக உள்ளது. இந்தியாவில் […]

Continue reading …

அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!

Comments Off on அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!
அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!

அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்! தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்துள்ளார் தமிழக முதல்வர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த 10 நாட்களாக மிக அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் 1000 ஐ நெருங்குகிறது. இந்நிலையில் தமிழக […]

Continue reading …

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

Comments Off on தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்! தமிழகத்தில் முதலீடு செய்ய வர சொல்லி 9 வானூர்தி நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவலால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை வேறு இடங்களுக்கு மாற்றி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்களை தமிழ்நாட்டுக்குள் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது சம்மந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள […]

Continue reading …

பாஜக மூத்த தலைவர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Comments Off on பாஜக மூத்த தலைவர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே என் லட்சுமணன் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே என் லக்‌ஷ்மணன் நேற்று உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 92. தமிழகத்தில் பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராக இருந்த அவர் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் பணிகளில் இருந்து விலகி சேலத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் நேற்று […]

Continue reading …

65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி!

Comments Off on 65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி!

65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப் போக்குவரத்து இயங்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 65 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு உண்டானது. இந்நிலையில் இப்போது இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் […]

Continue reading …

நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு!

Comments Off on நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு!

நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு! தற்போது நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அவருக்கு கே வி காமத் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார். மோடி 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைத்த போது முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு வழஙகப்பட்டது. இதுவரை இரண்டு முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.. ஆனால் அவரது […]

Continue reading …

திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்!

Comments Off on திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்!

திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்! திமுகவினர் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பாக இன்று காலை மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ‘ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசியதும், திமுகவின் மத்திய அமைச்சர் […]

Continue reading …

பி.எம் கேர் கணக்கு வழக்குகளை அறிவிக்க முடியாது! பிரதமர் அலுவலகம் திட்டவட்டம்!

Comments Off on பி.எம் கேர் கணக்கு வழக்குகளை அறிவிக்க முடியாது! பிரதமர் அலுவலகம் திட்டவட்டம்!

பி.எம் கேர் கணக்கு வழக்குகளை அறிவிக்க முடியாது! பிரதமர் அலுவலகம் திட்டவட்டம்! பி எம் கேர் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை பொதுவில் வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக […]

Continue reading …

இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு!

Comments Off on இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு!

இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு! இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பல கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்னர் இந்தியா என்ற பெயர் இருக்கவில்லை என்பது உறுதி. இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னரும் இந்தியா என்ற பெயரே அரசியலமைப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியை […]

Continue reading …